வாஷிங்டன் அமெரிக்காவின் கடைசி போலியோ நோயாளி உயிரிழந்தார். கடைசி போலியோ நோயாளி அமெரிக்காவில் போலியோ நோய் பாதிப்பு காரணமாக கடந்த 73 ஆண்டுகளுக்கும் மேலாக 'இரும்பு நுரையீரல்' எனப்படும் மருத்துவ சாதனத்தின் உதவியுடன் சுவாசித்து வந்த மார்த்தா ஆன் லில்லார்ட்(வயது78) காலமானார். இவர்தான் அமெரிக்காவின் கடைசி போலியோ நோயாளி ஆவார். அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் வசித்து வந்த மார்த்தா, கடந்த ஜூன் 26-ந் தேதி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 1948-ம் ஆண்டு பிறந்த மார்த்தா லில்லார்டுக்கு. 5 வயதாக இருந்தபோது 1953-ம் ஆண்டு கடுமையான போலியோ நோய் தாக்கியது. போலியோ தடுப்பூசி அமெரிக்காவில் போலியோ தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே அவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரது கழுத்துக்கு கீழே உள்ள உடல் பாகங்கள் முழுமையாக முடங்கின. சுயமாக சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், டாக்டர்கள் அவரை 'இரும்பு நுரையீரல்' எனப்படும் சுவாச உதவி எந்திரத்தில் வைத்தனர். அப் போது டாக்டர்கள், "அவர் 20 வயதுக்கு மேல் உயிருடன் இருப்பது கடினம்" என்று தெரிவித்தனர். ஆனால், மன உறுதியுடன் போராடிய மார்த்தா 78 வயது வரை வாழ்ந்து காட்டினார். அவர் இரண்டு முறை கடுமையான கொரோனா பாதிப்புக்கு உள்ளானார். ஒரு சகாப்தம் இதனால் அவரது நுரையீரல் செயல்திறன் வெகுவாக குறைந்தது. உடல் முழு வதும் முடங்கியிருந்த போதிலும், மார்த்தா தனது இடது கையை பயன்படுத்தி ஓவியங்கள் வரைந்தும், கவிதைகள் எழுதியும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழித்தார். அவரது மறைவின் மூலம் போலியோ நோயுடன் நீண்ட காலம் போராடிய ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளதாக மருத்துவ உலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/martha-lillard-last-known-us-polio-survivor-using-iron-lung-dies-aged-78




