திருச்சி, இலங்கையில் நடைபெற்ற போரில் ராமர், ராவணனை வென்று சீதையை அங்கிருந்து அழைத்துக் கொண்டு அயோத்திக்கு சென்றபோது, மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 94 கரியமாணிக்கம் கிராமத்தில் இளைப் பாறுவதற்காக தங்கி இருந்ததாக நம்பப்படுகிறது. இதை யொட்டி இங்கு ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் மூன்ற வது சனிக்கிழமை அன்று சீதை- ராமர் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக ஹோமங்கள் மற்றும் திருமஞ்சனட நடைபெற்றது. இதையடுத்து சீதை-ராமர் திருக்கல்யாணம், மாலை மாற்றுதல் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும், சென்னை, சேலம், திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், சாமிக்கு படைக்கப் பட்ட தேங்காய்களை வீட்டின் பூஜை அறையில் வைத்து பூஜை செய்து அதை சாப்பிட்டால் திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். நினைத்தது நடக்கும், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதையொட்டி சாமிக்கு படைக்கப்பட்ட 7 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. தேங்காய்களை பக்தர்கள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். அதிகபட்சமாக முதல் தேங்காய் ரூ.15 ஆயிரத்துக்கு ஏலம் போனது. மொத்தம் 7 தேங்காய் களும் ரூ.63 ஆயிரத்து 501-க்கு ஏலம் போனது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அமுதா ஜெயராமன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் ராம பிரான் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/rama-sita-celestial-wedding-devotees-auction-7-coconuts-for-63000




