சென்னை, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் த.வெ.க. சார்பில், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்யபாமா, அ.தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத். தாராபுரம் தொகுதியில் பானுமதி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் வக்கீல் பரந்தாமன், தாராபுரத்தில் (தனி) வக்கீல் சுகன்யா போட்டியிடுகின்றனர். வேட்புமனு தாக்கல் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 16-ந்தேதி முடிவடைகிறது. இதுவரையில் முக்கிய கட்சிகள் யாரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவில்லை. சுயேச்சைகள் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை), நாளை (விநாயகர் சதுர்த்தி) விடுமுறை நாட்களாகும். எனவே வேட்புமனு தாக்கல் செய்ய செவ்வாய் மற்றும் புதன் கிழமை மட்டுமே உள்ளது. கடைசி நாளான புதன்கிழமை அன்று த.வெ.க., தி.மு.க. அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள். வேட்புமனு தாக்கல் செய்த பிறகு தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கும். முதல்-அமைச்சர் விஜய் 2 கட்டமாக பிரசாரம் செய்ய இருக்கிறார். இந்த மாதம் 25-ந்தேதி மதுராந்தகத்தில் இருந்து அவர் பிரசாரத்தை தொடங்க உள்ளார். 27-ந்தேதி தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொள்வார். பின்னர் அக்டோபர் 2, 3-ந்தேதிகளில் மதுராந்தகம், தாராபுரத்தில் பிரசாரம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. தேர்தல் பணிக்குழு இந்நிலையில் தமிழகத்தில் நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களுக்காக அதிகாரப்பூர்வ தேர்தல் பணிக்குழுக்களை த.வெ.க.வின் கூட்டணி கட்சியான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அமைத்துள்ளது. கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தேர்தல் களப் பணிகளை ஒருங்கிணைப்பது, வாக்குச் சாவடி வாரியாக வியூகங்களை வகுப்பது மற்றும் பிரச்சாரங்களை மேற்கொள்வது ஆகிய முக்கியப் பொறுப்புகளை இந்தத் தேர்தல் பணிக்குழுக்கள் கவனிக்கும் என்று கூறப்படுகிறது. 101 - தாராபுரம் (தனி) சட்டமன்ற இடைத்தேர்தல் 2026 தேர்தல் பணிக்குழு அறிவிப்பு நடைபெறவுள்ள 101 - தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியின் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் திருமதி பி. சத்யபாமா அவர்களின் வெற்றிக்காக தமிழ்நாடு… — Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) September 13, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-has-formed-an-election-campaign-committee-to-support-tvk-alliance-candidates




