'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாகவும், 'நீட்' தேர்வு தோல்வி காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்தது போன்றவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக் கையை வலியுறுத்தியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் தன்னையும் இணைத்துக்கொண்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் நாளில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்வதாக அறிவித்தார். இதனையடுத்து சில நாட்களில் அவர் மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் தடியடி இருந்தாலும் அதே நாளில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியில் நாடு முழுவதும் இருந்து பல ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர். இவர்களை தடுக்க பல இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட் டன. ஆனாலும் கூட்டம் கட்டுப்படுத்த முடியாதபடி இருந்ததால் தடியடியும், கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டன. பதிலுக்கு போலீசார் மீது கல்வீச்சும் நடந்ததாக கூறப்படுகிறது.போலீசார் நடத்திய தடியடியில் பல இளைஞர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் நாடாளுமன்றம் அருகே உள்ள ஆர்.எம்.எல். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களும், இளைஞர்களும் தாக்கப்பட்ட இந்த விவகாரம் நாடு முழு வதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனைத்து எதிர்க்கட்சி களும் இதனை பெரிதாக எடுத்தன. காங்கிரஸ் கட்சியும் மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தை தொடங்கியுள்ளது. நாடு முழுவதிலும் இருந்து டெல்லியில் இளைஞர்கள் குவிவதால், டெல்லியில் பதற்றம் அதிகரித்துள்ளது. கூடுதல் படைகள் இந்த நிலையில், டெல்லியில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு கூடுதலாக 20 மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) கம்பெனிகளை பணியில் ஈடுபடுத்த உத்தரவிட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை இரவு இந்த உத்தரவை பிறப்பித்ததைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் இருந்து சிஆர்பிஎப் வீரர்கள் விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.பாதுகாப்பு அமைப்புகளின் அதிகாரிகள் கூறுகையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டங்கள், அரசியல் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்த இந்த கூடுதல் படைப்பிரிவுகள் களமிறக்கப்படுகின்றன என்றனர். போராட்டங்களின் போது பல இடங்களில் வன்முறை மோதல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, உடனடி பாதுகாப்பு பலப்படுத்தல் அவசியமாக இருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். எத்தனை வீரர்கள்? இந்த 20 சிஆர்பிஎப் கம்பெனிகளும், மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்காக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தேர்தல் முடிந்த பிறகும் மாநில அரசின் கோரிக்கையின்படி அங்கேயே இருந்த நிலையில், தற்போது டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஒரு சிஆர்பிஎப் கம்பெனியில் சுமார் 100 வீரர்கள் இடம்பெறுவர். இதற்கு முன்பே, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டங்கள் மற்றும் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கிய மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்னிட்டு, சுமார் 30 சிஆர்பிஎப் கம்பெனிகளும், அதன் கலவர தடுப்பு சிறப்புப் பிரிவான விரைவு அதிரடிப்படையும்டெல்லி போலீசுக்கு மத்திய அரசு வழங்கியிருந்தது. தற்போது கூடுதலாக 20 கம்பெனிகள் அனுப்பப்படுவதன் மூலம் தலைநகரில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/protest-intensifies-in-delhi-tension-rises-as-additional-forces-are-deployed




