நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் இதுவரை 160 பேர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது. தவிர 750 பேர் மாயமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வெள்ளத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சிலரும் சிக்கியிருக்கின்றனர். அந்த வகையில் புனித யாத்திரை சென்ற திருச்சியைச் சேர்ந்த சிவரஞ்சனி என்பவர் குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று அவரது கணவர் முத்துநாதன் நேற்று (ஆக.26) பேட்டி அளித்திருந்தார். நேபாளம் வெள்ளப்பெருக்கு இந்நிலையில் நேபாளத்தில் சிக்கியிருக்கும் தனது மனைவி பாதுகாப்பாக இருப்பதாக முத்துநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். "என்னுடைய மனைவி சிவரஞ்சனி 23 ஆம் தேதி கைலாயம் புனித யாத்திரை மேற்கொண்டார். கும்பக்கோணத்தில் சூப்பர் யாத்ரா ஏஜென்ஸி மூலமாகச் சென்றார். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் 17 பேருடன் சென்றார். திபெத்திற்குச் செல்லும்போது இப்படி ஆகியிருக்கிறது. Nepal Flood: "நல்வாய்ப்பாக உயிர்தப்பினோம்; வெள்ளம் வந்த இடத்தில்தான்." - நடிகர் அங்குர் ரத்தன் நேற்று காலை 7.30 மணிக்கு ஃபோன் செய்து 'இங்கு நிலச்சரிவு. நாங்கள் இங்கு பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம்' என்றார். இந்த அளவிற்கு வீரியமாக இருக்கும் என்பது அப்போது தெரியவில்லை. நானும் நிலச்சரிவு தானே பாதுகாப்பாக இருங்கள் என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டேன். பிறகு மதியம்தான் மிகப்பெரிய திடீர் வெள்ளம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. சிவரஞ்சனியின் கணவர் முத்துநாதன் அப்போது அவரை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. தற்போது என் மனைவி பாதுகாப்பாக இருக்கிறார். மற்றவர்களின் நிலை குறித்து தெரியவில்லை. அவர் ராணுவ முகாமில் இருக்கிறார். காணாமல் போனவர்களும் கிடைத்துவிட வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். டவர் இல்லாததால் அவரைத் தொடர்பு கொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கிறது. அனைவரையும் அரசு பத்திரமாக மீட்டுக்கொண்டு வரவேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார். Nepal: ”கடைசியாக எடுத்த போட்டோவை அனுப்பினார்” - அம்மாவைப் பற்றி தகவல் கிடைக்காததால் மகன் வேதனை முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/environment/disasters/my-wife-is-safe-says-husband-of-sivaranjani-who-is-stranded-in-nepal




