சென்னை, வார விடுமுறை தினமான இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. தங்கம் விலை கடந்த சில தினங்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை, நேற்று முன் தினம் காலையில் ஒரேயடியாக சவரனுக்கு ரூ.1,920 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,112க்கும், கிராமுக்கு ரூ.240 குறைந்து ஒரு கிராம் ரூ.14,015க்கும் விற்பனை செய்யப்பட்டது. காலையில் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை மாலையில் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,240க்கும், ஒரு கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,145க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்தது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.1,13,360க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து 14,170க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தங்கம் விலை இந்த நிலையில், விடுமுறை தினமான இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரன் ரூ.1,13,360 ஆகவும், கிராம் ரூ.14,170க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/what-is-the-current-price-of-ornamental-gold-in-chennai-today-3




