தேனி, தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 20). இவர், கடந்த 2024-ம் ஆண்டு ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் கொடுத்த புகாரின்பேரில், பெரியகுளம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, ஜெயராமனை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் ரக்சிதா ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை முடிவில் ஜெயராமனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி எழில் நேற்று தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயராமனை போலீ சார் பாதுகாப்பாக அழைத்துச்சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-sentenced-to-20-years-in-prison-for-sexually-assaulting-a-female-student




