Anthropic நிறுவனம் தனது Claude AI மூலம் உருவாக்கப்படும் text-ல் மனிதர்களால் எளிதில் கண்டறிய முடியாத “Invisible Watermark” ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 2, 2026 முதல் Claude models-ல் இந்த watermark இடம்பெற்று வருவதாகவும், பழைய models-க்கும் support வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த watermark-ன் முக்கிய சிறப்பு, Claude உருவாக்கிய text-ஐ ஒருவர் copy-paste செய்தாலும் அந்த அடையாளம் தொடரும் என்பதுதான். இதைக் கண்டறிய Anthropic விரைவில் ஒரு detection tool-ஐ வெளியிட உள்ளது. AI தற்போது social media posts, school assignments, job applications என பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஒரு text மனிதனால் எழுதப்பட்டதா அல்லது AI மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை உறுதியாக கண்டுபிடிப்பது கடினம். இதனால் Claude-ன் watermark, transparency- க்கு உதவும் என்று ஆதரவாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, மாணவர்கள் AI-யைப் பயன்படுத்தி assignment அல்லது academic work உருவாக்கிவிட்டு, அதை முழுவதும் தங்களுடையதாகக் காட்டுவதைக் கண்டறிய ஆசிரியர்களுக்கு இது கூடுதல் கருவியாக இருக்கலாம். ஆனால் இதில் இருக்கும் பிரச்னை என்னவென்றால், இந்த watermark, Claude அந்த content-ல் “likely involved” என்று மட்டுமே காட்டும்; முழு text-ஐ Claude தான் எழுதியது என்பதை உறுதியாக நிரூபிக்காது என்று Anthropic தெரிவித்துள்ளது. உதாரணமாக, ஒருவர் தனது சொந்த கட்டுரையை Claude மூலம் grammar correction, translation அல்லது summary செய்ய வைத்தாலும் watermark சில நேரங்களில் தொடரலாம். இதனால் அந்த எழுத்து முழுவதும் AI-generated என்று தவறாக புரிந்துகொள்ளப்படும் அபாயம் உள்ளது. AI-generated content அதிகமாக இணையத்தில் பரவி, அடுத்த தலைமுறை AI models-ன் training data-வில் மீண்டும் மீண்டும் சேரும்போது அதன் quality பாதிக்கப்படலாம் என்ற கவலை உள்ளது. எனவே, AI-generated text-ஐ அடையாளம் காணும் watermark, எதிர்காலத்தில் AI content-ஐ training data- வில் பிரித்து அறிய உதவக்கூடும். Claude-ன் invisible watermark ஒருபுறம் AI பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கக்கூடிய தொழில்நுட்பம். மறுபுறம், AI-யை உதவிக் கருவியாக மட்டும் பயன்படுத்தியவர்களுக்கும் தேவையற்ற சந்தேகங்களை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. AI பயன்படுத்தியதை தெரிந்துகொள்வது முக்கியமா? அல்லது AI பயன்படுத்தியதற்கான நிரந்தர அடையாளம் இருக்கக் கூடாதா? இந்த கேள்விதான் எதிர்கால AI உலகில் watermark-ன் முக்கியத்துவத்தை தீர்மானிக்கலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/technology/anthropics-new-claude-watermark-stirs-controversy-over-ai-written-content




