இந்தியா கலாச்சாரம், மதம் மற்றும் நம்பிக்கை அடிப்படையில் மட்டுமல்ல, காலநிலையிலும் பன்முகத்தன்மை கொண்ட நாடு, ஒரு சில மாநிலங்களில் மக்களால் தாங்க முடியாத அளவிற்கு வெயில் அடிக்கும் அதே வேளையில், மறுபுறம் நடுங்க வைக்கும் குளிரால் மக்கள் அவதியுறுகின்றனர். சரியான திட்டமிடல் இருந்தால் இது போன்ற இடங்களுக்கு சுற்றுலா சென்று வரலாம். இது போன்ற சில இடங்கள் கண்களுக்கு விருந்தளிப்பதாகவும், மனதிற்கு அமைதியை தருவதாகவும் இருக்கின்றன. இந்தியாவின் மிகக் குளிரான மற்றும் அதிவெப்பமான இடங்களை இந்த தொகுப்பில் காணலாம். திராஸ், ஜம்மு மற்றும் காஷ்மீர் 'லடாக்கின் நுழைவாயில்' என்று அழைக்கப்படும் திராஸ், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள ஸ்ரீநகர்-லேயில் அமைந்துள்ளது. 3350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இது, பூமியில் மிகக் குளிரான இடமாக கருதப்படுகிறது. குளிர்காலத்தில் சராசரி வெப்பநிலை மைனஸ் 23 டிகிரி செல்சியஸ் ஆகும். அதிகமான குளிர்ச்சியான அனுபவம் பெற இங்கே செல்லலாம். அமர்நாத் யாத்திரை மிகவும் பிரபலமான மலையேற்றப் பாதையாகும், ஸ்னோ போர்டிங், ஐஸ் ஸ்கேட்டிங் மற்றும் பனிச்சறுக்கு போன்ற அனைத்து குளிர்கால விளையாட்டுகளுக்கு ஏற்ற இடமாகும். பார்வையிட சரியான நேரம்: ஜூன் முதல் செப்டம்பர் வரை ஸ்பிதி, இமாச்சல பிரதேசம் ஸ்பிதி பள்ளத்தாக்கு, லடாக்கை திபெத்துடன் இணைக்கும் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ளது. 4270 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பிரபலமான சுற்றுலாத் தலமாக இருக்கும் இது, இந்தியாவின் மிகவும் குளிரான இடங்களில் ஒன்றாகும், அங்கு வெப்பநிலை மைனஸ் 30 டிகிரி முதல் மைனஸ் 40 டிகிரி வரை காணப்படும். பனி பெய்து பள்ளத்தாக்கை மூடுவதால் இந்த இடத்தை காண்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும். பார்வையிட சரியான நேரம்: மார்ச் முதல் ஜூன் மற்றும் அக்டோபர்-நவம்பர் சேலா பாஸ், அருணாச்சல பிரதேசம் அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 170 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சேலா, ஆண்டு முழுவதும் பனி மூடி காணப்படுகிறது. இந்தியாவில் ஒரு பிரபலமான கோடை விடுமுறை இதில் குளிர்காலத்தில் வெப்பநிலை மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் வரை குறையும். இந்த இடம் அழகான ஏரிகள் மற்றும் பசுமையான பள்ளத்தாக்குகளால் சூழப்பட்டுள்ளது. பார்வையிட சரியான நேரம்: மார்ச் முதல் மே மற்றும் அக்டோபர்-நவம்பர் கார்கில், லடாக் லடாக் பகுதியில் உள்ள கார்கில் மாவட்டத்தில் 8,780 அடி உயரத்தில் அமைந்துள்ள கார்கில் நகரம். குளிர்காலத்தில் இது மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் வரை குறையும், இது இந்தியாவின் மிகவும் குளிரான இடங்களில் ஒன்றாகும். கார்கில் அனைத்து சாகச பிரியர்களுக்கும் ஏற்றது. இங்குள்ள சானி, பஷ்கும், ரங்டம், முல்பெக் மற்றும் சோங்குல் போன்ற இடங்களை கண்கவர் காட்சிகளை கொண்டுள்ளது. பார்வையிட சரியான நேரம்: ஏப்ரல், மே மற்றும் செப்டம்பர்-அக்டோபர் ஹேம்குந்த் சாஹிப், உத்தரகாண்ட் ஹேம்குண்ட் சாஹிப், உத்தரகண்ட் மாநிலத்தில் சாமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சீக்கிய புனிதத் தலமாகும். இந்த இடம் 4,362 மீ உயரத்தில் அமைந்துள்ளது. ஹேம்குந்த் சாஹிப் கோடை காலத்தில் மட்டுமே அணுகக்கூடியதாக இருக்கும், குளிர்காலத்தில் இது முற்றிலும் பனியால் மூடப்பட்டிருக்கும், வடக்கு சிக்கிம் பனி மலைகளால் சூழப்பட்ட வடக்கு சிக்கிம் இந்தியாவின் அழகிய இடமாக கருதப்படுகிறது. 3962 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இருப்பினும், அதன் கரடுமுரடான நிலப்பரப்பு மற்றும் கடுமையான தட்பவெப்பநிலை ஆகியவை இதனை பார்வையிடுவது அவ்வளவு சுலபமல்ல. லாச்சென் மற்றும் தாங்கு பள்ளத்தாக்கு இதன் குளிரான இடங்கள் ஆகும். கடுமையான குளிர்காலத்தில் வெப்பநிலை மைனஸ் 15 டிகிரி செல்சியஸ் வரை குறைவதால், இங்கு செல்வதே சாகசம் ஆகும். பார்வையிட சரியான நேரம்: மே மற்றும் ஜூன் ஸ்ரீநகர், ஜம்மு மற்றும் காஷ்மீர் 1,585 மீ உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீநகர் இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகும். குளிர்காலத்தில், அனைத்தும் உறைந்து போகும் போது இரவில் மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் வரை குறையும். அடிக்கடி சாலைகள் துண்டிக்கப்படுவதால் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. பார்வையிட சரியான நேரம்: ஏப்ரல் முதல் அக்டோபர் வரை சியாச்சின் பனிப்பாறை 5400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சியாச்சின் பனிப்பாறை இந்தியாவின் இரண்டாவது குளிரான இடமாகும். சுமார் 20,000 அடி உயரத்தில் உள்ள இது உலகின் மிக உயரமான போர்க்களமாக அறியப்படுகிறது. சியாச்சின் பனிப்பாறை சுமார் 76 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இது விமானம் மூலம் மட்டுமே அணுக முடியும். இது இமயமலையின் ஒரு பகுதியாகும். குளிர்காலம் மிகவும் கடுமையானது, வெப்பநிலை மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வரை குறையும். இந்த இடம் பனிப்புயல் மற்றும் பனிச்சரிவுகளுக்கு பெயர் பெற்றது. பார்வையிட சரியான நேரம்: மே முதல் செப்டம்பர் வரை லே-லடாக் லே-லடாக் பயணம் என்பது ஒவ்வொரு சாகச விரும்பிகளின் பட்டியலில் உள்ளது. இது 3500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு அதிக மழை பெய்யும் என்பதால், வருடத்தில் சில மாதங்கள் மட்டுமே இங்கு செல்ல அனுமதிக்கப்படுகிறது. கோடை காலத்தில் இப்பகுதியின் சராசரி வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாக இருக்கும். அதே சமயம் குளிர்காலத்தில் வெப்பநிலை மைனஸ் 42 டிகிரி செல்சியஸ் வரை குறைகிறது. பார்வையிட சரியான நேரம்: ஏப்ரல், மே மற்றும் செப்டம்பர்-அக்டோபர் இந்தியாவில் வெப்பமான இடங்கள் பலோடி, ராஜஸ்தான் ராஜஸ்தானில் உள்ள பலோடி இந்தியாவின் வெப்பமான இடமாகும், அதிகபட்சமாக 2016-ம் ஆண்டு 51 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் இங்கு காணப்படும் நீர்நிலைகளில் தண்ணீர் வற்றி போகும். மக்கள் குடிநீருக்காக அலையும் காட்சி காண்போரின் மனதை உருக்கும். நாக்பூர், மராட்டியம் நாக்பூர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள இந்த இடம், இந்தியாவின் வெப்பமான இடங்களில் ஒன்றாகும். நகரின் அதிகபட்ச பதிவு செய்யப்பட்ட வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸ் ஆகும். வெப்பம் அதிகமாக இருந்தாலும் ஆண்டு முழுவதும் அதிகமாக சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. திட்லாகர், ஒடிசா ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள திட்லாகர், வெப்பநிலை பகலில் 43 டிகிரி செல்சியஸ் வரை உயர்கிறது, இதனால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதே மிகவும் கடினம். இந்த நகரம் மிகவும் பரபரப்பான சந்தைகள் மற்றும் அமைதியான இரவு வாழ்க்கைக்கு பெயர் பெற்றது, இதனால் இது ஒடிசாவில் பிரபலமான இடமாக அமைகிறது. பிலாஸ்பூர், சத்தீஸ்கர் சத்தீஸ்கரில் அமைந்துள்ள பிலாஸ்பூர், இந்தியாவின் அதி வெப்பமான இடங்களில் ஒன்றாகும். கடக ரேகைக்கு அருகில் அமைந்துள்ளதால் மற்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது சூரியனின் கதிர்வீச்சு 10 சதவீதம் அதிகம். இதன் காரணமாக பகல் நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வெப்பம் நீடிக்கிறது. ரெண்டசிந்தலா, ஆந்திரப் பிரதேசம் ரெண்டசிந்தலா என்பது ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். இந்த கிராமம் வறண்ட மற்றும் வெப்பமான காலநிலையை பெயர் பெற்றது. வெப்பம் அதிகம் உள்ள சமயங்களில் 45 டிகிரி செல்சியஸைத் தாண்டும், இதனால் வெளியில் நடப்பதே மிகவும் சிரமமாக இருக்கும். அதிகபட்சமாக 2012 மே மாதம் 52 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. ராமகுண்டம், தெலுங்கானா தெலுங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள ராமகுண்டம். அப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச வெப்பநிலை 47.3 செல்சியஸ். இந்த நகரம் பல நிலக்கரி சுரங்கங்களுடன், ஒரு தேசிய அனல் மின் நிலையத்தையும் கொண்டுள்ளது. பண்டா, உத்தரப் பிரதேசம் உத்தரபிரதேசத்தில் உள்ள பண்டா மாவட்டத்தின் வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸைத் வரை காணப்படும். இந்த நகரம் கோடை மற்றும் குளிர்காலம் ஆகிய இரண்டிலும் கடுமையாக இருக்கும். குளிர்காலத்தில் இங்கு வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைகிறது. இங்குள்ள உயர்ந்த வெப்பநிலை காரணமாக நகரவாசிகள் மிகவும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/coldest-and-hottest-places-in-india-when-to-go-on-a-trip




