சென்னை, சென்னையில் கனமழையால், மத்திய மந்திரி அமித்ஷா புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. கனமழை இந்நிலையில், சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள புறநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் இன்று மாலை கனமழை பெய்து வருகிறது. இதன்படி, வடபழனி, எழும்பூர், நுங்கம்பாக்கம், மாம்பலம், கிண்டி, வேப்பேரி, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், பெரியமேடு, கோயம்பேடு, பூந்தமல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மத்திய மந்திரி அமித்ஷா இதனால், தமிழகத்திற்கு வருகை தந்துள்ள மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, சுற்றுப்பயணம் முடிந்து டெல்லி புறப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. மழையால் அவருடைய ஹெலிகாப்டர் தொடர்ந்து பறப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தெளிவற்ற வானிலை, தொடர் மழையால் அது, வானத்தில் பறந்தபடி இருந்தது. இதனை தொடர்ந்து, தாம்பரம் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர் தரையிறக்கம் செய்யப்பட்டது. இதன்பின்னர், அவர் கார் மூலம் விமான நிலையத்திற்கு செல்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-in-chennai-delays-amit-shahs-departure




