புதுடெல்லி, மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு முன்னர் கூறிய கருத்தில் இருந்து பின்வாங்கியிருக்கிறது. அனுமதி தேவை நாடாளுமன்ற மாநிலங்களவையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்புமணி ராமதாஸ் மேகதாது குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய ஜல்சக்தி இணை மந்திரி ராஜ் பூஷண் சவுத்ரி, கடந்த 2018-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் காவிரியில் கர்நாடக அரசு அணை (மேகதாது) கட்டுவதற்கு தமிழகத்தின் அனுமதி தேவை என்று எங்கும் சொல்லப்படவில்லை என்றார். அவரின் இந்த கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. முதல்-அமைச்சர் விஜய், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் மத்திய அரசு, இந்த கருத்தை திரும்ப பெறவேண்டும் என்று கேட்டு கொண்டனர். திடீர் 'பல்டி' தற்போது மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு திடீரென 'பல்டி' அடித்துள்ளது. அதாவது தற்போது மேகதாது விவகா ரத்தில் காவிரி நீர் தீர்ப்பாயத்தின் 2007-ம் ஆண்டு தீர்ப்பில் இடம்பெற்றுள்ள 18-வது பிரிவு பொருத்தமானது என்றும் கூறியுள்ளது. இந்த பிரிவு என்பது, தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு முரண் இல்லாத வகையில் செயல்பட வேண்டும் என்பதாகும். நாடாளுமன்ற மக்களவையில் மேகதாது அணை தொடர்பாக தி.மு.க. உறுப்பினர் தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய ஜல்சக்தி இணை மந்திரி ராஜ் பூஷண் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கர்நாடக அரசின் மேகதாது திட்ட அறிக்கை, காவிரி நீர் தீர்ப் பாயத்தின் தீர்ப்புக்கும், தற்போது நடைமுறையில் உள்ள மத்திய நீர்வள ஆணைய வழிகாட்டுதல்களுக்கும் இணங்க திருத்தப்பட்டு மீண்டும் சமர்ப்பிக்குமாறு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது. மேகதாது திட்டம், காவிரி டெல்டா பகுதி மற்றும் பிற மாவட்டங்களின் குடிநீர் கிடைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கவலையை தெரிவித்து தமிழக அரசும், விவசாயிகள் அமைப்புகளும் அளித்த மனுக்களை மத்திய அரசு கவனத்தில் எடுத்துள்ளது. ஒவ்வொரு மாநிலமும். எந்த ஒரு திட்டம் தொடர்பாக பெறப்படும் மனுக்களும், அதற்குரிய நடைமுறைகளின்படி திட்ட மதிப்பீட்டின்போது பரிசீலிக்கப்படுகின்றன. காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே எந்த வகையான கட்டுமானத்தையும் மேற்கொள்வதற்கு தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய கீழ்நிலை மாநிலங்களின் ஒப்புதலை பெற வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் காவிரி நீர் தீர்ப்பாயத்தின் 2007-ம் ஆண்டு தீர்ப்பில் இடம்பெற்றுள்ள 18-வது பிரிவு பொருத்தமானது என்று சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் மீண்டும் உறுதிபடுத்தி உள்ளது. அந்தப் பிரிவின்படி, தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு முரணாக இல்லாத வகையில், ஒவ்வொரு மாநிலமும் தங்களது எல்லைக்குள் உள்ள நீரை பயன்படுத்துவதற்கும். ஒழுங்குபடுத்துவதற்கும் உரிமையும் அதிகாரமும் பெற்றுள்ளன என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/central-government-suddenly-relentless-in-mekedahu-case-new-information-released




