சென்னை, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், தினமும் தலைமைச் செயலகம் வந்து அரசுப் பணிகளை கவனிப்பதும், அவ்வப்போது பிற்பகலில் சில இடங்களுக்கு சென்று ஆய்வும் நடத்தி வருகிறார். அந்த வகையில், சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரெயில் தலைமை அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் இன்று ஆலோசனை நடத்தினார். முன்னதாக தலைமை செயலகத்தில் இருந்து ஓமந்தூரார் அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு காரில் வந்த அவரை மெட்ரோ அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதன் பின்னர், அங்கிருந்து மெட்ரோ ரெயிலில் முதல்-அமைச்சர் விஜய் பயணிகளுடன் பயணம் மேற்கொண்டார். இதையடுத்து நந்தனம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இறங்கிய அவர், அங்குள்ள மெட்ரோ ரெயில் தலைமை அலுவலகத்திற்கு சென்றார். இதைத் தொடர்ந்து, கிண்டி கத்திப்பாரா சென்ற முதல்-அமைச்சர் விஜய், அங்கு நடைபெறும் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவரிடம் மெட்ரோ பணிகளின் நிலவரம் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-inspected-the-kathipara-metro-work-in-person




