சென்னை ஆர்.டி.ஐ. சட்டத்தில் இருந்து பொதுதுறையிலுள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு இன்று (27.09.2026) அரசாணை பிறப்பித்துள்ளது. கட்டுப்பாடு தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள அரசாணையில், “பொது துறையின் கீழுள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான தகவல்களை பெறுவதில் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் அமைப்பாக அறிவித்து இந்த விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால், சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான விசாரணை ஆணையம் தொடர்பான நியமனங்கள், வகுப்புவாத, சாதிய மோதல்கள், காவல்துறையின் கைது நடவடிக்கைகள், போலீஸ் காவல், கைதிகளின் மரணம், போலீஸ் விசாரணை அறிக்கைகள் பெறுவதிலும் கட்டுப்பாடு விதிக்கப்படும். முக்கிய முடிவு சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான மாதாந்திர சீராய்வு கூட்டம், தலைமை செயலாளர் அறிவுறுத்தலின் பேரிலான சிறப்பு சட்டம் மற்றும் ஒழுங்கு கூட்டங்கள் உள்ளிட்ட விவரங்களை பெறுவதிலும் இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். இதன்படி, மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான கேள்விகளுக்கு அளிக்கப்படும் பதில்கள், மாணவர், விவசாயி மற்றும் அரசியல் கட்சியினர் உள்ளிட்டோரின் போராட்டம், அவதூறு கட்டுரைகள், செய்தி துணுக்குகள், பேச்சுகள் உள்ளிட்ட விசயங்கள் தொடர்பான தகவல்களையும் பெற முடியாது. சட்டம் மற்றும் ஒழுங்கு விசயத்தில், அனைத்து தகவல்களையும் மக்களுக்கு வழங்க முடியாது என தெரிவித்து சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான விசயத்தில், இந்த முக்கிய முடிவை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சட்டம் ஒழுங்கிற்கு விலக்கு அளிக்கப்பட்டதற்கு தி.மு.க. எம்.பி.கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- “வெளிப்படையான அரசு” என்று சொல்லி ஆட்சிக்கு வந்த த.வெ.க. அரசு, நான்கே மாதங்களில் மக்களை கேள்வி கேட்கக்கூடாது என்கிறது. 500க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்தும், சட்டம் ஒழுங்கைச் சீர்செய்ய திறனற்ற அரசு, இப்போது தனது தவறை மறைக்க, சட்டம் ஒழுங்கு குறித்த தகவல்களையே மக்கள் கேட்க முடியாதபடி RTI உரிமையை கட்டுப்படுத்த முயற்சிப்பது வெட்கக்கேடானது. இதுதான் மாற்றமா. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/within-just-four-months-the-tvk-government-says-people-should-not-ask-questions-kanimozhi-condemns




