Best Automobile Channel விருதை Motowagon சேனலின் ரெஜினுக்கு வழங்க மேடையேறிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேசுகையில், ``தங்கள் நலனை காட்டிலும் மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி வெளிப்படையான ஆட்சி நடத்த வேண்டும் என்பதுதான் எம்.ஜி.ஆர், அம்மா, விஜய் என மூவருக்குமான பொதுவான விஷயம். இந்த அரிய வாய்ப்பை எனக்கு அளித்திருக்கிற மக்கள் மனங்களில் நீக்கமற நிலைத்திருக்கும் முதல்வர் ஜோசப் விஜய்க்கு நன்றி. இறைவன் அருளால் அவர் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக செய்து வருகிறேன். I'm Enjoying It. M.SC B.ed பட்டதாரி என்னுடைய மனைவி. பொது வாழ்வில் இருக்கும் என் மூலம் அவர் நிறைய படித்து முன்னேற நினைத்தார். ஆனால், எனக்காக அவர் எல்லாவற்றையும் தியாகம் செய்தார். எல்லா சபாநாயகர்களுக்கும் சில தனிச் சிறப்புக் குணங்கள் உண்டு. அந்த வகையில் பழனிவேல் ராஜனை எனக்குப் பிடிக்கும். செஸ் பெடரேஷனின் தலைவராக இருந்தேன். அம்மா ஆட்சிக்காலத்தில் விஸ்வநாதன் ஆனந்துக்கும் கார்ல்சனுக்கும் நடந்த உலக செஸ் போட்டியை சென்னையில் நடத்த முக்கிய காரணமாக இருந்தேன். விளையாட்டுகளின் மீது எனக்கு ஆர்வம் உண்டு" என்றார். விகடனுடைய தனிச்சிறப்பு அவர்களின் கார்ட்டூன் தான். உங்களுடைய கார்ட்டூனால் ஒரு காலத்தில் என்ன நடந்தது என்பது மக்களுக்கே தெரியும். சமீபத்தில் கூட மத்திய அரசு குறித்து நீங்கள் வரைந்த கார்ட்டூனை உதாரணமாக சொல்லலாம். இந்த கம்பெனி சார்ந்து இதை வாங்குங்கள் என்றால் அவர் விளம்பரதாரர் ஆகிவிடுவார். ஆனால், தரத்தை பொறுத்து எதை வாங்கலாம். கூடாது என மக்கள் மொழியில் சொல்வதால்தான் ரெஜினுக்கு இந்த விருது. அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அம்மா இருந்த போது, என்னை சென்னை மேயர் ஆக்கப் போவதாக கூறினார். உடனே என்னுடைய மகன், மேயரான பிறகு புதிய கார் வாங்க வேண்டாம். அதற்கு முன்பாகவே வாங்கிவிடுவோம் என Ford Endeavor வாங்கிக் கொடுத்தார். அதேமாதிரி இப்போது ஆயிரம் விளக்கில் போட்டியிடும் போதும், 'அப்பா நீங்கள் ஆயிரம் விளக்கில் வென்றுவிடுவீர்கள். ஜெயித்த பிறகு கார் வாங்கினால் தவறாக பேசிவிடுவார்கள். அதனால் இப்போதே வாங்கிவிடலாம்' என ஒரு காரை வாங்கிக் கொடுத்தார். எனக்கு பெயர் ஞாபகம் வரவில்லை. காரை பொறுத்தவரைக்கும் என் பிள்ளைகளின் சாய்ஸ்தான். ஆனால், எனக்கு பழைய அம்பாசிடர் கார்தான் பிடிக்கும்" என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/jcd-prabhakar-vikatans-cartoons-have-made-history-people-know-their-impact




