ஜெய்ப்பூர், இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் அதிகரித்து வருகிறது. பன்றிக்காய்ச்சல் என்பது பன்றிகளிலிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய ஒரு வைரஸ் தொற்றாகும். இந்த வைரஸ் தொற்று மனிதர்களுக்கு இடையே வேகமாக பரவும் தன்மை கொண்டது. இதனிடையே, ராஜஸ்தானில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில வேளாண் மந்திரியாக கிரோடி லால் மீனா (வயது 74) செயல்பட்டு வருகிறார். பன்றிக்காய்ச்சல் - தீவிர சிகிச்சை இந்நிலையில், மந்திரி கிரோடி லால் மீனாவுக்கு கடந்த சில நாட்களுக்குமுன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை நடத்திய டாக்டர்கள் மந்திரிக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மந்திரி கிரோடி லால் மீனாவின் உடல்நிலை மோசமடைந்து வரும் நிலையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/rajasthan-minister-tests-positive-for-swine-flu



