சென்னை, மோடி அரசுக்குத், தமிழ்நாட்டு மக்களின் நலன் மீதும் மீனவர்களின் வாழ்வாதாரம் மீதும் துளியளவும் அக்கறையில்லை என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- மீனவர்கள் கைது 8 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது! படகுகளும் பறிமுதல்! இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி கொழும்புவில் இருக்கும்போதே இந்த அத்துமீறல் நடந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்பது குறித்து வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி இலங்கை அரசிடம் பேசமாட்டாரா? 2023 முதல் இதுவரை 1,306 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 179 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மாநிலங்களவையிலேயே பிரவீன் சக்ரவர்த்தியின் கேள்விக்கு பதிலளித்த ஒப்புக்கொண்டுவிட்டுப் பொறுப்பிலிருந்து நழுவும் மோடி அரசுக்குத், தமிழ்நாட்டு மக்களின் நலன் மீதும் மீனவர்களின் வாழ்வாதாரம் மீதும் துளியளவும் அக்கறையில்லை என்பது மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது! கவன ஈர்ப்புத் தீர்மான இலங்கையின் இந்தத் தொடர் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், சிறைபிடிக்கப்பட்ட அனைவரையும் அவர்களின் படகுகளுடன் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் பாராளுமன்றத்தில் இன்று (06.08.2026) கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்துள்ளேன்! இவ்வாறு அதில் தெரிவிக்கபட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/8-rameswaram-fishermen-arrested-wont-the-foreign-secretary-speak-to-the-sri-lankan-government-manickam-tagore




