கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில் உலகப் புகழ்பெற்ற 32-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி அரசு ஆடவர் கலைக்கல்லூரி மைதானத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. பாரம்பரிய நாய் கண்காட்சி இதன் ஒரு பகுதியாக நேற்று பொதுமக்கள் மற்றும் நாய் வளர்ப்போர்களை கவரும் வகையில் அரிய வகை மற்றும் பாரம்பரிய நாய் கண்காட்சி நடைபெற்றது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் இந்த போட்டியில் பங்கேற்க அழைத்து வரப்பட்டன. அணிவகுத்த நாய்கள் இந்த கண்காட்சியில் தமிழ்நாட்டின் பாரம்பரிய நாய் இனங்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி மற்றும் கோம்பை ஆகிய நாய்கள் கம்பீரமாக வலம் வந்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின. அதேபோல் ஜெர்மன் ஷெப்பர்ட், ராட்வைலர், கிரேட் டேன், பக், லேப்ரடார் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த அரிய வகை அக்கிடா உள்ளிட்ட பல நாய் இனங்களும் இதில் பங்கேற்றன. பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் அனைத்து நாய்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, தடுப்பூசி சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற நாய்கள், அதன் உரிமையாளர்கள் இட்ட கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து சாகசங்களை செய்து காட்டின. இதைப் பார்த்து மைதானத்தில் கூடியிருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். பரிசுகள் இதனை தொடர்ந்து, பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறப்பாக செயல்பட்ட மற்றும் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்ட நாய்களின் உரிமையாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், சுழற்கோப்பைகளும், பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. மாங்கனி கண்காட்சிக்கு வந்த பொதுமக்களை இந்த நாய் கண்காட்சி பெரிதும் கவர்ந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/krishnagiri-mangani-exhibition-dogs-attract-crowds




