சென்னை, தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் அருகே பார்கள் இயங்கி வருகின்றன. இந்த பார்களை நடத்துவதற்கு, அதற்கான விதிகளின்படி உரிமம் பெற வேண்டும். அந்த உரிமத்தை பெறுவதற்கு, பார்கள் நிறுவப்படும் கட்டிடங்களுக்கான திட்ட அனுமதி, நில அனுமதி, கட்டிட ஸ்திரத்தன்மை சான்றிதழ் போன்றவற்றை சி.எம்.டிஏ. அல்லது டி.டி.சி.பி. நிறு வனங்களிடம் இருந்து பெற்று தாக்கல் செய்ய வேண்டும். இந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனத்திற்கு புகார் மனுக்கள் வரப்பெற்றுள்ளன. அவற்றில் கூறப்பட்டு இருப்பதாவது:- சென்னையில் இயங்கும் பார்கள் அமைந்துள்ள பல கட்டிடங்கள், சென்னை மாநகராட்சி அல்லது சி.எம்.டி.ஏ.விடம் இருந்து முறையான திட்ட அனுமதியை பெறவில்லை என்று தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் பார் அனுமதி பெறுவதற்காக பல போலியான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றினால் விபத்து நேரிட்டு, மதுபானம் அருந்துவோர் பாதிக்கப் படும் சூழ்நிலை உள்ளது. மேலும், 2019-ம் ஆண்டில் வழக்கு ஒன்றில் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், கட்டிட திட்ட அனுமதியை முறையாக பெற்றுள்ள கட்டிடங்களில் மட்டும் மதுவிற்பனை கடைகளை அமைக்க அனுமதிக்க வேண்டும். அந்த கட்டிடம் மற்றும் அது அமைந்துள்ள நிலம் ஆகியவற்றுக்கான திட்ட அனுமதி, சட்டப்படி பெறப்பட்டுள்ளதா? என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரி சரிபார்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் 6-ந்தேதி (இன்று) டாஸ்மாக் நிறுவனத்தின் உயர்நிலை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. தற்போது நடத்தப்படும் பார்கள் இயங்க 3 மாதங்க ளுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட உள்ளது. அது மட்டுமல்லாமல், பார்களை நடத்துவதற்கான மொத்தமுள்ள 54 விதிகளில் சில விதிகளை திருத்த முடிவு செய்யப்பட உள்ளது. இந்த திருத்தத்தின்படி, சென்னை மாநகராட்சி அல்லது சி.எம்.டி.ஏ. அல்லது டி.டி.சி.பி.யிடம் பெறப்பட்ட, கட்டிடங்கள் மற்றும் நிலத்துக்கான திட்ட அனுமதி ஆணைகள் சரிபார்க்கப்படும். உணவு கட்டுப்பாட்டுத்துறை, தீயணைப்புத்துறை போன்றவற்றிடம் இருந்து பெறப்பட்ட சான்றிதழ்களும் சரி பார்க்கப்படும். முறையான அனுமதி பெறாத கட்டிடங்களில் பார்கள் இயங்க உரிமம் தரக்கூடாது. அப்படி உரிமம் தரப்பட்டால் அது கோர்ட்டு அவமதிப்பு குற்றமாக கருதப்படும். போலி அனுமதி உத்தரவுகள் தரப்பட்டு இருந்தால், அவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்? என்பது தொடர்பாகவும் விதிகளில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்படும். இந்த திருத்தங்கள் அனைத்தும் எப்.எல்.2 என்ற மனமகிழ் மன்றங்களுக்கும் பொருந்தும். டெண்டர் விடு வதற்கான விதிகளிலும் திருத்தங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-bars-allowed-to-operate-for-another-3-months-key-decision-today




