ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2025 நிகழ்வில் சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படத்துக்கான விருதை ‘டிராகன்’ திரைப்படம் பெற்றது. ‘கலைப்புலி’ எஸ்.தாணு வழங்கிய இந்த விருதை ‘டிராகன்’ திரைப்படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, தயாரிப்பாளர் ஐஸ்வர்யா கல்பாத்தி இருவரும் பெற்றுக்கொண்டனர். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசுகையில், ``எஸ்.டி.ஆர் இப்போ `அரசன்’ திரைப்படத்தில் பிஸியாக இருக்காரு. சூப்பர்ஸ்டாரின் `தர்மன்’ முடிச்சிட்டு வந்தவுடனே ‘STR 51’ ஆரம்பிக்கிறோம். அஸ்வத் மாரிமுத்து - தயாரிப்பாளர் ஐஸ்வர்யா `தர்மன்’ சூப்பர்ஸ்டார் படம். அதுவும் கமலஹாசன் சார் தயாரிப்பு. அதனால, அதுல எனக்கு நிறைய பொறுப்பு இருக்கு. ரஜினி சாருக்கு வயசான மாதிரியே தெரியலை. `படையப்பா’ படத்துல 20 வருஷத்துக்கு முன்னாடி உங்களுக்கு வயசானதே தெரியலைங்கிற மாதிரி எனக்கு இப்ப அப்படியேதான் இருக்கு. செட்ல துள்ளி குதிச்சுக்கிட்டு ஜாலியா இருக்கார். `தர்மன்’ ரொம்ப ஸ்பெஷல். தமிழ் ஆடியன்ஸ், இந்தியன் ஆடியன்ஸ் எல்லாருக்குமே ரொம்ப நேர்த்தியான ஒரு படமா இது இருக்கும். அதாவது, தலைவருடைய ஃபேன்ஸ், தலைவருடைய ஸ்வாக், தலைவருடைய எல்லாமே நம்ம ஸ்டைல்ல ஜாலியா அப்படியே இருக்கும். நிறைய இயக்குநர்களோட கனவு ரஜினி சாரோட, கமல் சாரோட படம் பண்ணணும்னு இருக்கும். அதை நான் பண்றேன்ங்கறதால பெரிய கடமை எனக்கு இருக்கு. `தர்மன்’ படம் ‘பிளாஸ்ட்’ ஆக இருக்கும். தலைவருடைய முதல் நாள் ஷூட்டில் காரிலிருந்து இறங்கி வந்து மருத்துவமனைக்குச் செல்வதுபோல வைத்தோம். மானிட்டர் பார்த்து எனக்கு ஸ்வாக்-ஆக இருந்தது. விசில் அடிச்சு அங்கேயே என்ஜாய் பண்ணேன்” என்றார். ஆனந்த விகடன் சினிமா விருதுகள், 2025 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://cinema.vikatan.com/kollywood/ananda-vikatan-cinema-awards-2025-aswath-marimuthu-speech




