'மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா' - டெல்லி ஜந்தர் மந்தரில் ஜென் Z தலைமுறையினர் வெற்றிகரமாக போராட்டத்தை நடத்தி முடித்துள்ளனர். இந்த நேரத்தில் டெல்லி அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 'தற்கால தாய்மை' என்கிற தலைப்பில் இரண்டு நாள் தேசிய மாநாடு நடைபெற்றது. விஷ்வ மாங்கல்ய சபா அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டின் இறுதி நாளான நேற்று (ஜூலை 26), ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார். மோகன் பகவத் - RSS"இனி என்னிடம் அரசியல் பேசாதீர்கள்; அன்புமணி." - அரசியலில் இருந்து விலகிய ராமதாஸ் அதில் ஜென் Z-யினர் குறித்து மோகன் பகவத் பேசியதாவது. "நாம் இதுவரை பின்பற்றி வந்த அணுகுமுறையை மாற்ற வேண்டிய அவசியம் வந்துள்ளது. நமது பாணியை நாம் மாற்றியமைக்க வேண்டும். நாம் சின்ன வயதில் இருந்த போது, நமது தாயோ தந்தையோ ஏதேனும் கூறிவிட்டால், அங்கு விவாதத்திற்கு இடமிருக்காது. அமைதி என்றால் அமைதி தான். அது மரியாதை. அதை மீறி யாரும் கேள்வி கேட்டதில்லை. அவர்கள் 'வாழ்க்கையைத் தெரிந்தவர்கள்' என்பதால், அவர்களின் அனுபவத்தைப் பின்பற்றுவது எல்லாவற்றையும் சரியாகக் கொண்டு சேர்க்கும் என்பதை நாம் அறிந்திருந்தோம். ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை. குடும்பத்திற்குள் உரையாடல்கள் நின்றுவிட்டன புதிய தலைமுறையினர் கேள்விகள் கேட்கிறார்கள். ஒவ்வொன்றிற்கும் பின்னால் உள்ள காரணத்தை விளக்கியே ஆக வேண்டும். அவர்களுக்கு அன்பை வழங்கவும், நேரத்தை ஒதுக்கவும், உரையாடலில் ஈடுபடவும் பெருமளவு தேவைகள் உள்ளன. இது கட்டளைகளாக இல்லாமல் கலந்தாலோசனையாகவும், உத்தரவுகளாக இல்லாமல் ஒருமித்த கருத்து உருவாக்கமாகவும் இருக்க வேண்டும். இன்று குடும்பங்களுக்குள்ளேயே உரையாடல்கள் நின்றுவிட்டன. இந்த நிலை மாற வேண்டும். புதிய தலைமுறையினருக்கு ஒவ்வொன்றின் பின்னணியில் உள்ள நியாயத்தையும் விளக்க வேண்டியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரவ்னீத் சிங் பிட்டு! - அமைச்சரவை விரைவில் மாற்றம்? பெற்றோர்கள் சிறந்த முன்மாதிரி இன்று குடும்பங்களில் மிகப்பெரிய தேவை என்னவென்றால், இளைஞர்களுக்கு நேரம் ஒதுக்குவதும் அவர்களுடன் தொடர்ச்சியான உரையாடலைத் தக்க வைத்துக்கொள்வதும்தான். பிள்ளைகளின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதிலளித்து அவற்றைத் தீர்த்து வைப்பது பெற்றோரின் கடமையாகும். அதற்குப் பெற்றோர்கள் தாங்களாகவே தொடர்ந்து தங்களின் அறிவை வளர்த்துக்கொள்வது அவசியமாகிறது. பிள்ளைகள் அறிவுறுத்தல்களை விடப் பார்த்துப் பின்பற்றுவதன் மூலமே அதிகம் கற்றுக்கொள்கிறார்கள். எனவே, பெற்றோர் தாங்களே ஒரு சிறந்த முன்மாதிரியாகச் நடந்துகொள்ள வேண்டும். முதல் 12 ஆண்டுகள் முக்கியமானது ஒரு குழந்தை வாழ்க்கையில் எவ்வளவு தூரம் உயர்ந்தாலும், இறுதியில் தனக்குச் சொந்தமானது எது என்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்தே தீரும். நமது குழந்தைகளின் வளர்ப்பு முதல் 12 ஆண்டுகளுக்கு மட்டுமே நமது கைகளில் உள்ளது. நாம் அவர்களுக்கு எதையும் கற்றுக்கொடுக்காவிட்டால், அவர்கள் எவ்வாறு கற்றுக்கொள்வார்கள்? நாம் நம்மை அறிவால் ஆயுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். அவர்களின் ஆர்வத்தை நாம் பூர்த்தி செய்து, அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும். சமுதாயத்தில் பல விவாதங்கள் குழப்பத்தினாலேயே எழுகின்றன. சில சமயங்களில் குழப்பங்கள் வேண்டுமென்றே கூட உருவாக்கப்படுகின்றன. மோகன் பகவத்அமெரிக்கா, ஈரான் தாக்குதல் திடீர் நிறுத்தம் ஏன்? ட்ரம்ப் - ஜே.டி.வான்ஸ் சந்திப்பு முக்கிய காரணம்? பாடப்புத்தகங்களில் இந்து தெய்வங்கள்! இந்தியாவில் உள்ள மக்கள், வெளிநாட்டு வாழ்க்கைமுறைகளை யோசிக்காமல் பின்பற்றுவதற்குப் பதிலாக, இந்தியக் கலாச்சாரம் மற்றும் மதிப்புகளுக்கு ஏற்ப வாழ வேண்டும். நீண்ட காலமாக, பாரத கலாச்சாரத்தைப் பற்றியும் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டன. நமது பாரம்பரியங்கள் தவறானவை என்பது போலச் சித்தரிக்கப்பட்டது. ஆனால், யதார்த்தம் என்னவென்றால், நமது கலாச்சாரத்தின் அடித்தளம் மிகவும் வலிமையானது மற்றும் தெளிவானது. நமது வரலாறு, நமது அறிவு மற்றும் நமது பாரம்பரியங்கள் மீது நம்பிக்கையோடு நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்களில் இந்து தெய்வங்களைப் பற்றிய அறிவும் சேர்க்கப்பட வேண்டும்". என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/mohan-bhagwat-urges-dialogue-with-gen-z-not-blind-obedience




