சென்னை, நோயுற்றவர்களின் பிணி தீர்ப்பதில் அலட்சியம் காட்டாமல் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லிப்ட் பழுதாகி உள்ளே ஆக்சிஜன் சிலிண்டருடன் நோயாளியும், மருத்துவப் பணியாளர்களும் சிக்கி மீட்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. உயிர் காக்கும் மருத்துவமனைகள் தவெக ஆட்சியின் அலட்சிய நிர்வாகத்தால் மரண பயத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. மாற்றம் கொடுப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்களின் ஆட்சியில் இன்றும் அரசு மருத்துவமனைகளில் எலிகள் ஓடுவதும், குளூக்கோஸ் பாட்டில்களை உறவினர்கள் கையில் ஏந்திக் கொண்டு நிற்பதும், செவிலியர், மருத்துவர் அல்லாதோர் சிகிச்சை கொடுக்கும் அவலங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஏழை மக்களின் உயிர் காக்கும் கூடங்களாக செயல்பட வேண்டிய அரசு மருத்துவமனைகள் முறையான பராமரிப்பின்மை, பணியாளர்கள் பற்றாக்குறையால் அவல நிலைக்குச் சென்று கொண்டிருப்பது ஏழை மக்களின் உயிருடன் விளையாடுவது போன்றது. இனியும் தாமதிக்காமல் அரசு மருத்துவமனைகளில் முறையான பராமரிப்பு, போதிய உபகரணங்கள், காலிப் பணியிடங்களை நிரப்பி நோயுற்றவர்களின் பிணி தீர்ப்பதில் அலட்சியம் காட்டாமல் அக்கறையுடன் செயல்பட நடவடிக்கைகளை மேற்கொள்ள தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/must-act-with-care-in-resolving-patients-ailments




