திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் விஞ்ஞானிகள் குழுவினர் இன்று சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு, தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணன், வரும் செப்டம்பர் 4-ந்தேதி அதிகாலை 2.55 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. 17 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு 05 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும், இஸ்ரோ தனியார்மயமாக்கப்படவில்லை என்றும், செயற்கைக்கோள்களின் தேவை அதிகரித்துள்ளதால் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்படுவதாகவும் அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/agreement-with-private-companies-due-to-increased-demand-for-satellites-isro-chairman-narayanan




