திருப்பதி, திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயல் அதிகாரி மெண்டு லோகநாதம் மீது ஆந்திர ஊழல் தடுப்பு பிரிவு போலீ சார், சொத்து குவிப்பு வழக்குப்பதிவு செய்தனர். திருப்பதி லட்டு கலப்படம் குறித்து விசாரித்த சி.பி.ஐ., சில தேவஸ்தான அதிகாரிகள் வருமானத்துக்கு மீறி சொத்து குவித்திருப்பதாக உளவு தகவல்களை பகிர்ந்து கொண்டது. அதன் அடிப்படையில், திருப்பதியில் மெண்டு லோகநாதம் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் என 4 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதில், சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்துகளை மெண்டு லோகநாதம் வாங்கி இருப்பது தெரிய வந்தது. 2 கிலோ தங்கம், ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம், 6 கிலோ வெள்ளி ஆகியவற்றையும் வாங்கி இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர் மீது சொத்து குவிப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/case-registered-against-a-senior-tirupati-devasthanam-official




