சென்னை, விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘ரணபாலி’ வரும் அக்டோபர் 16-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது. மூன்றாவது முறையாக கூட்டணி தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் ஏற்கனவே ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்த நிலையில், மூன்றாவது முறையாக இருவரும் புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளனர். ‘ரணபாலி’ டைட்டில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு ‘ரணபாலி’ என பெயரிடப்பட்டுள்ளது. ‘மம்மி’ உள்ளிட்ட படங்களில் நடித்த அர்னால்ட் வோஸ்லூ இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அஜய் - அதுல் இசையமைக்கின்றனர். 1870-களின் பின்னணியில் கதை 1870-களில் நடைபெற்ற பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் பெரும் பஞ்சத்தின் பின்னணியில் இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. அந்த காலகட்டத்தில் தனது மக்களை காப்பாற்ற போராடும் ஒரு புரட்சிகர வீரனை மையமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இப்படம், பிரம்மாண்டமான பான்-இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது. டீசர் வெளியானது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் வெளியாக உள்ள இப்படம் வரும் அக்டோபர் 16-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/teaser-of-the-film-ranapali-starring-vijay-deverakonda-and-rashmika-has-been-release




