கடந்த 27ம் தேதியன்று கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் துறையினர், வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த சொகுசு கார் ஒன்றைச் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டனர். காரின் பின்புறத்தில் மூட்டை மூட்டையாக பொருட்கள் இருப்பதைப் பார்த்த உதவி ஆய்வாளர் விக்னேஷ், அவற்றை சோதனையிட முயன்றார். அப்போது காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர், போலீஸாரைத் தள்ளிவிட்டு காரின் கதவுகளை மூடி, திடீரென காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. காரில் தொங்கியபடி சென்ற போலீஸ் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தலைமை காவலர் வேல்முருகன், உடனடியாக ஓடும் காரின் மேற்கூரையில் பாய்ந்து பிடித்துக் கொண்டார். ஆனால், காரின் மீது போலீஸ் இருப்பதையும் பொருட்படுத்தாமல் கடத்தல்காரர்கள் காரைத் தொடர்ந்து வேகமாக ஓட்டிச் சென்றனர். கடத்தல்காரர்கள் சுமார் 40 கி.மீ. தூரம் சென்ற நிலையில், அவிநாசி பகுதியில் ஆம்புலன்ஸ்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் காரைச் சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்தனர். முதலமைச்சர் விஜய் பாராட்டு விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாபு தாரா, ராஜேஷ், சுரேஷ் என்பதும், பெங்களூருவில் இருந்து 233 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களைக் கடத்தி வந்தததும் தெரியவந்தது. இதற்கிடையே, காரின் மேற்கூரையில் தலைமைக் காவலர் வேல்முருகன் ஆபத்தான நிலையில் தொங்கியபடி சென்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. தலைமைக் காவலர் வேல்முருகனுக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் துணிச்சலாகச் செயல்பட்ட தலைமைக் காவலர் வேல்முருகனை நேரில் வரவழைத்து, தமிழ்நாடு முதலமச்சர் ஜோசப் விஜய் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார். ’சினிமாவை மிஞ்சிய சேஸிங்’-கார் மேற்கூரையில் 40கி.மீ தொங்கியபடி சென்று கடத்தல் கும்பலை பிடித்த போலீஸ் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/crime/chief-minister-vijay-praises-police-apprehended-gutkha-gang-while-hanging-onto-roof-of-car




