சமீப காலமாக, தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் தவெக அரசைக் கடுமையாகச் சாடி வருகின்றன. இந்த நேரத்தில் அரசு, சட்ட ஒழுங்கு குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (RTI) மாற்றம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. அது. தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-ன் கீழ், தமிழ்நாடு அரசின் உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்பான ‘பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு)த் துறை’ குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு இனி பதில் அளிக்கப்படாது. சட்டம்-ஒழுங்கு இந்த அறிவிப்பின் படி, எது குறித்த கேள்விகள் இனி கேட்க முடியாது? சாதி மற்றும் சமூக மோதல்கள், காவல்துறை துப்பாக்கிச் சூடு குறித்து PSO 150(3) (பழைய எண் 144(3))-இன் கீழ் நடத்தப்படும் விசாரணை அறிக்கைகள் மற்றும் காவல் துறை காவல், காவல் துறை சித்ரவதை மற்றும் காவலில் உள்ள கைதிகளின் மரணம் குறித்து PSO 151 (பழைய எண் 145)-இன் கீழ் நடத்தப்படும் விசாரணை அறிக்கைகளை ஆய்வு செய்தல், மாணவர்கள், விவசாயத் தொழிலாளர்கள், அரசியல் கட்சிகள் போன்றவற்றின் போராட்டங்கள், அரசியல் காரணங்கள், சமூக/சாதி மோதல்கள், அரசியல் போராட்டங்கள், மாணவர் போராட்டங்கள் போன்றவற்றின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகளைக் கையாளுதல், அவதூறான கட்டுரைகள், செய்திப் பொருட்கள், உரைகள் முதலானவற்றிற்காக வழக்குத் தொடர அனுமதி அளிப்பது தொடர்பான விவகாரங்களைக் கையாளுதல் உள்ளிட்டவை ஆகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/tamil-nadu-changes-rti-rules-for-law-and-order-department




