தேவையான பொருட்கள்:- வெள்ளரிக்காய் - 1 தேங்காய் - அரை மூடி இஞ்சி - 2 (சிறிய துண்டு) பச்சை மிளகாய் - 2 சீரகம் - ½ டீஸ்பூன் கெட்டியான தயிர் - 1 கப் தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் கடுகு - சிறிதளவு உளுந்தம் பருப்பு - சிறிதளவு காய்ந்த மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிதளவு செய்முறை:- முதலில் வெள்ளரிக்காயை தோல் மற்றும் விதைகளை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும். அடுத்து, கியாஸ் அடுப்பை 'ஆன்' செய்து வாய் அகன்ற ஒரு பாத்திரத்தை வைக்கவும். அதில் வெட்டி வைத்த வெள்ளரிக்காய் துண்டுகளை போட்டு, அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு வேகவிடவும். மற்றொரு பக்கம் வெள்ளரிக்காய் தயிர் பச்சடிக்கான மசாலா தயாரிக்க வேண்டும். அதற்கு, அரை மூடி தேங்காயை துருவி, மிக்சி ஜாரில் எடுத்துக்கொள்ளவும். அத்துடன் தோல் நீக்கிய இஞ்சி துண்டு, பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மையாக அரைத்துக்கொள்ளவும். அதை, அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் வெள்ளரிக்காய் துண்டுகளுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்கு கிளறிவிடவும். மசாலா சேர்ந்த பிறகு கொதி வந்தவுடன் அடுப்பை 'ஆப்' செய்து ஆறவிடவும். அத்துடன் கெட்டியான தயிரை நன்கு கலக்கி சேர்க்கவும். அடுத்து தாளிப்பதற்காக, கியாஸ் அடுப்பை 'ஆன்' செய்து, வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடாகியதும் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கிளறிவிடவும். பொரிந்த உடன் அதை வெள்ளரிக்காய் தயிர் பச்சடியில் ஊற்றி கிளறிவிடவும். சுவையான, மணமான வெள்ளரிக்காய் தயிர் பச்சடி ரெடி. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/sunday-special-how-to-make-delicious-aromatic-cucumber-yogurt-pachadi




