பெங்களூரு, கர்நாடக மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இதையடுத்து முதல்-மந்திரியாக 3 ஆண்டுகள் பதவி வகித்த சித்தராமையா, கடந்த மே மாதம் ராஜினாமா செய்ததை அடுத்து, டி.கே.சிவக்குமார் கர்நாடக முதல்-மந்திரியாக பதவியேற்றார். இதற்கு முன்னதாக 2013-18 வரை 5 ஆண்டுகள் என மொத்தமாக 8 ஆண்டுகள் கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா பதவி வகித்துள்ளார். இதனிடையே 2028 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என சித்தராமையா அறிவித்தார். அடுத்த தேர்தல் வரும்போது தனக்கு 82 வயது ஆகிவிடும் என்பதால், முன்பிருந்த உற்சாகத்துடன் பணியாற்றுவது சாத்தியமில்லை என அவர் கூறினார். மேலும், நேர்மையான அரசியலுக்கு இடமில்லாத நிலை உள்ளது என்று குறிப்பிட்ட அவர், தனது எதிர்கால வாழ்க்கையை பொதுசேவைக்காக அர்ப்பணிக்க உள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில், சித்தராமையாவை மீண்டும் முதல்-மந்திரியாக பார்க்கும் வாய்ப்பு அவரது ஆதரவாளர்களுக்கு கிடைத்துள்ளது. அதாவது, கன்னட திரைப்படம் ஒன்றில் சித்தராமையா முதல்-மந்திரியாக நடிக்க உள்ளார். புதுமுக இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் தயாராகும் இந்த படத்தை ஆர்.ஏ.பிலிம் பேக்டரி என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குநர் கூறிய கதை பிடித்ததால் சித்தராமையா நடிக்க சம்மதித்துள்ளார். இந்த திரைப்படத்துக்கு, முக்கிய மந்திரி என்ற பெயர் சூட்டப்படலாம் என தெரிகிறது. மேலும், படப்பிடிப்பு, எடிட்டிங் உட்பட அனைத்தையும் 48 மணி நேரத்தில் முடித்து, உலக சாதனை படைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். நவம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளி, கல்லுாரி நாட்களில் நாடகங்களில் நடித்த அனுபவம் கொண்டவரான சித்தராமையா, 2017-ம் ஆண்டு கவிதா லங்கேஷ் இயக்கிய, ‘சம்மர் ஹாலிடேஸ்’ என்ற குழந்தைகள் திரைப்படத்தில், முதல்-மந்திரியாகவே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/siddaramaiah-to-play-the-role-of-chief-minister-in-a-kannada-film




