புதுடெல்லி, வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த 3 நாள் வங்கி வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுகமான உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இந்த முடிவை அறிவித்துள்ளது. 3 நாள் வேலைநிறுத்தம் அறிவிப்பு வாரத்தில் இரண்டு நாள் விடுமுறை, அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையேயான பாரபட்சமான நடவடிக்கைகளை மாற்றுதல், ஐ.டி.பி.ஐ. வங்கியை தனியார்மயமாக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கடந்த 11-ம் தேதி முதல்கட்ட வேலைநிறுத்தம் நடைபெற்றது. தொடர்ந்து, செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை 3 நாள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. நள்ளிரவு வரை நீடித்த பேச்சுவார்த்தை இந்த நிலையில், இந்திய வங்கிகள் சங்கப் பிரதிநிதிகளுக்கும், வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்புக்கும் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. நள்ளிரவு வரை நீடித்த பேச்சுவார்த்தையில் இரு தரப்புக்கும் இடையே சுமுகமான உடன்பாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை குறித்து உயர்மட்டக் குழு அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறை நாளாக அறிவிப்பது தொடர்பாக, வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று வழிகளை ஆராய்ந்து முடிவெடுக்க உயர்மட்டக் குழு ஒன்றை உடனடியாக அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊக்கத்தொகை விவகாரத்தில் தீர்வு காண முடிவு அதிகாரிகளுக்கான செயல்திறன் ஊக்கத்தொகை திட்டமான பி.எல்.ஐ. தொடர்பான மாற்றங்கள் குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காணவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பிற கோரிக்கைகள் தொடர்பாகவும் விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன. இன்று வழக்கம்போல் வங்கிகள் செயல்படும் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, திட்டமிட்ட போராட்ட நடவடிக்கைகள் மற்றும் 3 நாள் வேலை நிறுத்தத்தை ஒத்திவைப்பதாக வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (யு.எப்.பி.யு.) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால், செப்டம்பர் 28-ம் தேதியான இன்று நாடு முழுவதும் வங்கிகள் வழக்கம்போல் செயல்படும். வாடிக்கையாளர்கள், வர்த்தகர்கள் நிம்மதி மாதத்தின் கடைசி வாரத்தில் 3 நாட்கள் வங்கிச் சேவைகள் முடங்கும் நிலை ஏற்பட்டிருந்த நிலையில், வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டதால் அந்த பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/bank-employees-strike-postponed-banks-to-operate-as-usual-today




