செயின்ட் லூயிஸ், சின்க்பீல்டு கோப்பை செஸ் 3-வது சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வியடைந்துள்ளார். பிரக்ஞானந்தா - வின்சென்ட் கிராண்ட் செஸ் தொடரின் அங்கமான சின்க்பீல்டு கோப்பை செஸ் போட்டி அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்து வருகிறது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 10 வீரர்கள் பங்கேற்று மோதி வருகின்றனர். இதன் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 51-வது நகர்த்தலில் தோல்வி அடைந்தார். 4-வது இடம் மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீரர் வெஸ்லி சோ 37-வது காய்நகர்த்தலில் சக நாட்டு வீரர் பேபியானோ கருணாவுக்கு அதிர்ச்சி அளித்தார். 3-வது சுற்று முடிவில் வெஸ்லி சோ 2 புள்ளிகளுடன் முதலிடத்திலும், மேக்சிம் வாஷியர், லெவோன் அரோனியன் தலா 2 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கின்றனர். பிரக்ஞானந்தா (1% புள்ளி) 4-வது இடத்தை இணைந்து வகிக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/othersports/sinquefield-cup-chess-praggnanandhaa-loses-in-round-3




