நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் (குட்கா) விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி வாலிபர் சபரிவர்மன், சிறையில் அடைக்கப்பட்ட சில நாட்களிலேயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மாற்றுத்திறனாளி சபரிவர்மன் கன்னியாகுமரி மாவட்டம் தென் தாமரைக்குளம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ததாகக் கூறி, கடந்த ஜூலை 9 -ம் தேதி 35 வயதான மாற்றுத்திறனாளி சபரிவர்மன் என்பவரை தென் தாமரைக்குளம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து சுமார் 200 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, சபரிவர்மனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தின் உத்தரவின்படி, நாகர்கோவில் மாவட்ட கிளைச் சிறையில், சபரிவர்மனை போலீசார் விசாரணை கைதியாக அடைத்தனர். விசாரணை கைதி உயிரிழப்பு இந்நிலையில், இன்று காலை திடீரென விசாரணை கைதியான சபரிவர்மனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரை உடனடியாக போலீசார் மருத்துவ சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். முதற்கட்ட தகவலின்படி மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே உறுதி செய்யப்படும் என டாக்டர்கள் தெரிவித்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. உறவினர்கள் போராட்டம் இந்த சம்பவம் தொடர்பாக, நேசமணி நகர் போலீசார் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறையில் விசாரணை கைதியாக இருந்தவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரின் மரணத்தின் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிணவறை (Mortuary) முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மருத்துவமனையின் முன்பு குவிந்த உறவினர்கள், இளம் வயதில் மாரடைப்பினால் உயிரிழந்ததாக கூறப்படும் தகவலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 19 இடங்களில் காயம் இந்தநிலையில், சிறையில் உயிரிழந்ததாக கூறப்படும் சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. கை, கால்கள், நெஞ்சு பகுதிகளில் காயம், வலது கையில் முறிவு என உடற்கூறாய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மாவட்ட நீதிபதி முன்னிலையில் நடந்த பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. விசாரணை கைதி மரணம்; 3 பேர் கைது இந்தநிலையில்,சபர்வர்மன் மரணம் தொடர்பாக சிறை வார்டன் உட்பட சிறை காவலர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறை தலைமை வார்டன் ஜெகன், வார்டன்கள் சிவக்குமார், திருவிடைநம்பியை நேசமணி நகர் போலீசார் கைது செய்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/sabarivarman-injured-in-19-places-on-his-body-shocking-information-released




