புதுடெல்லி, தேசிய தொழில் வழித்தட மேம்பாட்டு மற்றும் அமலாக்க அறக்கட்டளையின் 3-வது உயர்மட்ட கண்காணிப்புக் கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநிலங்களில் தொழில் வழித்தடத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் கீர்த்தனா, தமிழ்நாட் டுக்கு தேவையான திட்டங்கள் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்கவும், பல்வேறு பகுதிகளை தொழில் மையங்க ளுடன் இணைக்கவும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, சென்னை-திருவனந் தபுரம் தொழில் வழித்தட திட்டத்தை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். இந்த தொழில் வழித்தடம் அமைக்கப்பட்டால், அதன் வழியில் உள்ள பகுதிகளில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்க முடியும். தொழில் மையங்களுக்கு இடையே சாலை, ரெயில் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த முடியும். இதன் மூலம் புதிய முதலீடுகள், உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்புகள் பெருகும். சென்னை-திருவனந்தபுரம் தொழில் வழித்தடம் அமைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அதனைத் தொடர்ந்து பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், "சென்னை-தூத்துக் குடி தொழில் வழித்தடத் திட்டத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டிலேயே முன்மொழிவு செய்யப் பட்டது. மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்த போதிலும், தமிழக அரசு இந்தத் திட் டத்துக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறினார். உடனடியாக அதற்கு பதிலளித்த அமைச்சர் கீர்த்தனா, உத்தேச தொழில் வழித்தடத்தை பரி சீலித்து தேவையான சாத்தியக்கூறு மற்றும் பாதை ஆய்வு பணிகளை தொடங்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் விரைவில் முறையான கோரிக்கை மனு அளிக்கப்படும் என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/tamil-nadu-government-will-work-in-coordination-with-the-central-government-minister-keerthana-affirms-in-delhi




