சென்னை, “கடந்த சில நாட்களாக எனக்கும் எனது ‘சிக்மா’ திரைப்படத்திற்கும் எதிராக திட்டமிட்டு எதிர்மறையான ட்வீட்டுகள் பதிவிடப்படுவதை நான் கவனித்து வருகிறேன். இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார், இதற்காக பணம் கொடுப்பவர்கள் யார் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்” என்று சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இயக்குநராக அறிமுகமான ஜேசன் சஞ்சய் ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள டொராண்டோ பிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பு தொடர்பான டிப்ளமோ படித்துள்ளார். தொடர்ந்து லண்டனில் திரைக்கதை எழுதுவது தொடர்பான பி.ஏ. ஹானர்ஸ் படிப்பையும் முடித்துள்ளார். சில குறும்படங்களையும் இயக்கியுள்ள அவர், தற்போது ‘சிக்மா’ திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைக்கும் இப்படத்தின் மீது வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. இதற்கிடையே, ‘சிக்மா’ திரைப்படத்தை பார்த்த நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் ஜோதிகா ஆகியோர் படத்தை பாராட்டி தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். “திட்டமிட்டு எதிர்மறையான விமர்சனங்கள்” இந்த நிலையில், ‘சிக்மா’ படத்தின் கதாநாயகன் சந்தீப் கிஷன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பரபரப்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த சில நாட்களாக எனக்கும் எனது ‘சிக்மா’ திரைப்படத்திற்கும் எதிராக திட்டமிட்டு எதிர்மறையான ட்வீட்டுகள் பதிவிடப்படுவதை நான் கவனித்து வருகிறேன். இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார், இதற்காக பணம் கொடுப்பவர்கள் யார் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்” என்று தெரிவித்துள்ளார். “உங்களுக்குத்தான் இழப்பு அதிகமாக இருக்கும்” மேலும், “என்னை விட உங்களுக்குத்தான் இழப்பு அதிகமாக இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் நேரடியாக சிக்கிக்கொண்டால் அனைவரும் மாட்டிக்கொள்வீர்கள் என்பதை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றும் சந்தீப் கிஷன் குறிப்பிட்டுள்ளார். சந்தீப் கிஷனின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. எனினும், அவர் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக யாரை குறிப்பிடுகிறார் என்பது குறித்து எந்த விவரமும் வெளியாகவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/coordinated-criticism-against-the-movie-sita-sundeep-kishans-sensational-post



