சென்னை, பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மற்றும் 12-ந்தேதி 41 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. 41 ரெயில்கள் ரத்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் கடற்கரை மற்றும் தாம்பரம் ரெயில் நிலையங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 12-ந்தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, அன்றைய தினம் காலை 10.30 மணி முதல் மதியம் 3.30 மணி வரை (5 மணி நேரத்திற்கு) 41 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, கடற்கரையில் இருந்து புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், திருமால்பூர் வரை செல்லும் 20 மின்சார ரெயில்களும், செங்கல்பட்டு. தாம்பரம். காஞ்சீபுரத்தில் இருந்து புறப்பட்டு கடற்கரை வரும் 21 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு காலை 10.30, 11 மணி, 11.15, 11.30, 12 மணி, 12.30, 1.15, 1.30, 2 மணி, 2.30, 3.15, 3.45 ஆகிய நேரங்களில் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுகிறது. கடற்கரை செங்கல்பட்டு இடையே காலை 10.45, 11.45, மதியம் 12.15, 12.45, 2.15, 2.45 ஆகிய நேரங்களில் மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. கடற்கரையில் இருந்து மதியம் 1 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரெயில், கடற்கரையில் இருந்து மதியம் 3 மணிக்கு திருமால்பூர் செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து காலை 10.45, 11 மணி, 11.30, மதியம் 12.15, 12.30, 1.30, 1.45, 2.15, 2.25, 2.30, 3.30 மணிக்கு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து காலை 9.30, 10.40, 11 மணி, 11.40, மதியம் 12.05, 1 மணி, 1.50, 2.25 மணிக்கு கடற்கரை செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது. காஞ்சீபுரத்தில் இருந்து காலை 9.30, திருமால்பூரில் இருந்து 11.05 மணிக்கு புறப்பட்டு கடற்கரை செல்லும் மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. சிறப்பு ரெயில்கள் மின்சார ரெயில்கள் ரத்து காரணமாக பயணிகளின் வசதிக்காக, தாம்பரத்தில் இருந்து காலை 11.45,, மதியம் 12.45.1.15, 1.45, 2.45, 3.15, 3.45 மணிக்கு செங்கல்பட்டுக்கும், மதியம் 2 மணிக்கு அரக்கோணத்துக்கும், பிற்பகல் 4 மணிக்கு திருமால்பூருக்கும் பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படவுள்ளன. மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து காலை 9.30, 10.40, 11, 11.40, பிற்பகல் 12.05, 1, 1.50 மணிக்கும், திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக் கும். காஞ்சீபுரத்தில் இருந்து காலை 9.30 மணிக்கும் தாம்பரத்துக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-work-41-electric-trains-cancelled-on-5th-and-12th




