மானாமதுரை, நள்ளிரவில் புகுந்த மர்ம கும்பல் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி அட்டகாசம் செய்தனர். மர்ம கும்பல் அட்டகாசம் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் புகுந்த மர்ம கும்பல் அப்பகுதியில் உள்ள வீடுகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் கண்ணாடிகளை கைகளில் வைத்திருந்த ஆயுதங்களால் தாக்கி சேதப்படுத்தினர். இந்த சத்தம் கேட்டு கண் விழித்த பொது மக்களை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், அப்பகுதியில் சென்ற பெண் ஒருவரை கீழே தள்ளியதில் அவர் கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. போலீசார் விசாரணை இது குறித்து தகவல் அறிந்த மானாமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/a-mysterious-gang-is-wreaking-havoc-by-smashing-houses-and-vehicles-in-the-middle-of-the-night




