சென்னை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; “தமிழகத்திற்கு காவேரி நீரை குறித்த நேரத்திற்கு திறந்து விட மறுத்த உங்கள் கர்நாடக காங்கிரஸ் முதல்வர் டி.கே.சிவக்குமார் தற்போது தமிழகத்தில் தான் இருக்கிறார். தமிழகத்தின் குறுவை சாகுபடியை திட்டமிட்டு சீரழித்த அவருக்கு எதிராக, தமிழக பாஜகவாலும் போர்க்கொடி தூக்கியிருக்க முடியும். காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸின் சூழ்ச்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளும் எங்களுடன் கரம் கோர்த்திருப்பார்கள். ஆனால், நாங்கள் அதை செய்யவில்லை, செய்யவும் மாட்டோம். காரணம், நாங்கள் பிறந்த இந்த தமிழ் மண் எங்களுக்கு “விருந்தோம்பலின்” முக்கியத்துவத்தை போதித்துள்ளது. நமது மத்திய உள்துறை மந்திரியை சந்திப்பதற்காக, அரசு முறைப் பயணமாக தமிழகத்திற்கு வருகை தந்திருக்கும், கர்நாடக காங்கிரஸ் முதல்வருக்கு உரிய மரியாதை கொடுப்பது ஒவ்வொரு தமிழரின் கடமை. தமிழகக் காங்கிரஸாரைக் கூட சந்திக்காமல், அலுவல் ரீதியாக தமிழகம் வந்து, திரும்பும் கர்நாடக முதல்வரின் அரசுப் பயணத்தை நாங்கள் அரசியலாக்க விரும்பவில்லை. ஆனால், அந்த அரசியல் நாகரிகம் உங்களிடம் இல்லை என்பது வருத்தத்துக்குரியது. இதனால் தானோ என்னமோ, இந்தியா முழுவதும் பெரும்பாலான மக்கள் உங்கள் கட்சியை வெறுக்கிறார்கள். நாட்டின் மத்திய உள்துறை மந்திரியான அமித்ஷாவின் அரசுப் பயணத்திற்கு கருப்பு கொடி காட்டி, தமிழகத்தின் பெருமைக்கு களங்கம் விளைவிக்க நினைத்த உங்களை, மக்கள் ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/அமித்ஷாவின்-தமிழக-வருகைக்கு-கருப்பு-கொடி-காட்டுவதா-காங்கிரசுக்கு-நயினார்-நாகேந்திரன்-கண்டனம்



