மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் அரசுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை மலிவு விலைக்கு வாங்கியது தொடர்பாக மறைந்த மகாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வர் அஜித் பவாரின் மகன் பார்த் பவாருக்கு சொந்தமான அமேடியா எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் பார்த் பவாருக்கு 99 சதவீத பங்கு இருக்கிறது. ஆனால் இந்நிறுவனம் வாங்கிய 40 ஏக்கர் நில பரிவர்த்தனை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட ஒரு சதவீதம் மட்டுமே பங்கு இருக்கும் திக்விஜய் பாட்டீல் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு நிலத்தை சீத்தல் தேஜ்வானி என்பவர் தனது நிலம் என்று கூறி விற்பனை செய்துவிட்டார். இது தொடர்பான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. இவ்விவகாரத்தில் குறிப்பிட்ட நில பதிவுக்கு ஒப்புதல் வழங்கிய தாசில்தார் சூர்யகாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மும்பை ஐகோர்ட் அவர் இவ்வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீதான விசாரணையின்போது தாசில்தாருக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியது. முன் ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது துணை முதல்வர் சுனேத்ரா பவாரின் மகனும் மாநிலங்களவை எம்.பி.யுமான பார்த் பவார் 99% பங்குகளை வைத்திருக்கும் அமேடியா எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் இருப்பதாகக் குறிப்பிட்ட நீதிமன்றம், பார்த் பவார் அந்த ஒப்பந்தத்தின் பயனாளி இல்லையா என்று வாய்மொழியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பார்த் பவார் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் அல்ல என்றும், அதேசமயம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் ஒரு சதவீத பங்குகளை வைத்திருக்கும் இயக்குநர் திக்விஜய் பாட்டீல் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் கூறிய நீதிபதி மாதவ் ஜம்தார், 99% பங்குகளை வைத்திருப்பவர் பொறுப்பல்ல என்பதுதான் அரசின் நிலைப்பாடா என்றும் அரசுத் தரப்பிடம் வினவினார். மாநில டிஜிபி சதானந்த் டேட் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், விசாரணை ஆவணங்களை விரிவாக ஆய்வு செய்ததில், இன்னும் தொழில்முறை சார்ந்த மற்றும் விரிவான விசாரணை தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக கூடுதல் விசாரணையை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், விசாரணையின் முன்னேற்றத்தை வாரந்தோறும் ஆய்வு செய்யுமாறு புனே காவல் ஆணையர் அமிதேஷ் குமார் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் ஸ்ரீகாந்த் கவாந்த் ஆஜராகி, "அமேடியா ஒரு கூட்டு நிறுவனம் அல்ல. அசையாச் சொத்தை வாங்குவதற்கு பார்த் பவார் எந்தத் தீர்மானத்திலும் கையெழுத்திடவில்லை. திக்விஜய் பாட்டீல் அனைத்து ஆவணங்களிலும் கையெழுத்திட்டதால் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. விற்பனைப் பத்திரம் ஏற்கனவே உரிமையியல் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுவிட்டது'' என்று தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/trending/is-ajit-pawars-sonwho-holds-a-99-stake-in-the-company-that-purchased-government-landnot-involved-in-the-land-fraud




