செங்கல்பட்டு, சென்னை வண்டலூர் அருகே அரசுப் பள்ளி மாணவியை மர்ம நபர்கள் சிலர் பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் இருந்தே கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாலியல் வன்கொடுமை செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அருகே உள்ள கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில், 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவியை 4 பேர் கொண்ட கும்பல் பள்ளியின் சுற்றுச் சுவரைத் தாண்டி குதித்து, கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும், அச்சத்தையும் அளிக்கிறது. இச்சம்பவத்தை எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறி கல்வி கற்கும் புனிதமான பள்ளி வளாகத்திற்குள்ளேயே சமூக விரோதிகள் புகுந்து இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டிருப்பதன் மூலம் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. பெண்களின் பாதுகாப்பிற்காக 'சிங்கப்பெண் அதிரடிப்படை' போன்ற திட்டங்கள் இருப்பதாக அரசு விளம்பரப்படுத்தினாலும், பள்ளி மாணவிகளுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது வேதனைக்குரியது. இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் தாமதமின்றி உடனடியாகக் கைது செய்து, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதோடு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் வளாகங்களிலும், வகுப்பறைகளிலும் உடனடியாகச் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை அரசு பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பள்ளி வளாகங்களுக்குள் சமூக விரோதிகள் எளிதில் நுழைய முடியாதவாறு, ஒவ்வொரு பள்ளிக்கும் பாதுகாப்பு காவலர்களை அரசே நேரடியாக நியமித்து, பள்ளி நேரங்களிலும் பிற நேரங்களிலும் மாணவிகளின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய வேண்டும். பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் தமிழக அரசு அலட்சியம் காட்டாமல், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மாணவிகள் பயமின்றி கல்வி கற்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-assault-on-a-student-on-the-school-premises-stbi-party-condemns




