ஜார்ஜியா இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஷீத்தல் (வயது 57). இவர் கூகுள் நிறுவனத்தில் பொறியியல் பிரிவின் தலைமை அதிகாரியாக பணியாற்றினார். ஜார்ஜியா மாகாணத்தின் காப் கவுண்டியில் உள்ள ஸ்மைர்னா நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில், குடும்பத் தகராறின்போது ஷீத்தலை அவரது கணவர் கிர்க் வர்செசியன் துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கிச் சூடு சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அங்கு குண்டுக் காயங்களுடன் ஷீத்தலும், அவரது மகன் ஜேசனும் கிடந்தனர். இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால், ஷீத்தல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக கிர்க் வர்செசியனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் ஜேசனின் உடல்நிலை குறித்த கூடுதல் தகவல்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. ஷீத்தல், அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்பு இங்கிலாந்து, இந்தியா, கானா ஆகிய நாடுகளில் வசித்துள்ளார். 1994-ம் ஆண்டு அமெரிக்காவின் ஜார்ஜியா தொழில்நுட்பக் கழகத்தில் கணினி அறிவியலில் பட்டம் பெற்றார். பல்வேறு நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றிய அவர், பின்னர் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார். தொழில்நுட்பத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/husband-shoots-dead-indian-origin-female-officer-horror-in-the-us




