சென்னை, தெற்கு ரெயில்வே சென்னை கோட்டத்திற்கான 71-வது வார விழா மற்றும் 'ரெயில்வே சேவா புரஸ்கார்' விருது வழங்கும் விழாவானது சென்னை அயனாவரத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் சைலேந்திர சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். தொடர்ந்து. 2025-26-ம் நிதியாண்டில் ரெயில்வேயில் சிறப்பாக பணியாற்றிய 3 ரெயில்வே அதிகாரிகள் மற்றும் 70 ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கினார். பின்னர், சைலேந்திர சிங் பேசியதாவது:- வருவாய் சென்னை கோட்டத்தில் தற்போது தினமும் 1,000 ரெயில்கள் இயக்கப்பட்டு, அதில் சுமார் 14 லட்சம் பேர் பயணம் செய்து வருகிறார்கள். 2025-26-ம் நிதியாண்டில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.5 ஆயிரத்து 38 கோடி வருவாய் எட்டியுள்ளது. 11.330 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. பொன்னேரியில் 2-வது கதி சக்தி முனையம் (சரக்கு முனையம்) செயல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டி உணவக ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தானியங்கி புத்தக விற்பனை எந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் பேட்டரி கார் வசதி புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-railway-division-records-record-revenue-of-rs-5038-crore-manager-shailendra-singh




