சென்னை, வேளாங்கண்ணி திருவிழாவிற்காக தெற்கு மத்திய ரெயில்வே விரைவு சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது. ரெயில் எண் 07125/07126 இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- வேளாங்கண்ணி திருவிழாவின் போது ஏற்படும் கூடுதல் பயணிகள் நெரிசலை கருத்தில் கொண்டு, தெற்கு மத்திய ரெயில்வே கீழ்க்கண்டவாறு விரைவு சிறப்பு ரெயில்களை (தேவைக்கேற்ப இயக்கப்படும் ரெயில்கள்) அறிவித்துள்ளது. 1. ரெயில் எண் 07125/07126 சார்லபள்ளி - வேளாங்கண்ணி – சார்லாபள்ளி விரைவு சிறப்பு ரெயில்கள்: ரெயில் எண் 07125 சார்லபள்ளி - வேளாங்கண்ணி விரைவு சிறப்பு ரெயில், 2026 ஆகஸ்ட் 28 மற்றும் செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) காலை 7.40 மணிக்கு சார்லபள்ளியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9.10 மணிக்கு வேளாங்கண்ணியைச் சென்றடையும் (2 சேவைகள்). வேளாங்கண்ணி - சார்லாபள்ளி மறுமார்க்கத்தில், ரெயில் எண் 07126 வேளாங்கண்ணி - சார்லபள்ளி விரைவு சிறப்பு ரெயில், 2026 ஆகஸ்ட் 29 மற்றும் செப்டம்பர் 5 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) மாலை 19.30 மணிக்கு வேளாங்கண்ணியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 22.00 மணிக்கு சார்லபள்ளியை சென்றடையும் (2 சேவைகள்). பெட்டிகளின் அமைப்பு: 3 - குளிர்சாதன வசதி கொண்ட இரு அடுக்கு (AC Two Tier) பெட்டிகள், 5 - குளிர்சாதன வசதி கொண்ட மூன்று அடுக்கு (AC Three Tier) பெட்டிகள், 10 - படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் (Sleeper Class), 4 - பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் மற்றும் 2 - சரக்கு மற்றும் பிரேக் வேன்கள்(Luggage cum Brake Vans). ரெயில் எண் 07125/07126 சார்லபள்ளி - வேளாங்கண்ணி - சார்லாபள்ளி விரைவு சிறப்பு ரெயில்களின் நேரம் மற்றும் நிறுத்தங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு (நேரங்கள் 24 மணிநேர அடிப்படையில்): ரெயில் எண் 07127/07128 2. ரெயில் எண் 07127/07128 சார்லபள்ளி - வேளாங்கண்ணி - சார்லாபள்ளி விரைவுச் சிறப்பு ரெயில்கள்: ரெயில் எண் 07127 சார்லபள்ளி - வேளாங்கண்ணி விரைவுச் சிறப்பு ரெயில், 2026 செப்டம்பர் 8 அன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7.40 மணிக்கு சார்லபள்ளியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9.10 மணிக்கு வேளாங்கண்ணியைச் சென்றடையும் (1 சேவை). மறுமார்க்கத்தில், ரெயில் எண் 07128 வேளாங்கண்ணி - சார்லபள்ளி விரைவுச் சிறப்பு ரெயில், 2026 செப்டம்பர் 9 அன்று (புதன்கிழமை) இரவு 23.00 மணிக்கு வேளாங்கண்ணியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 22.15 மணிக்கு சார்லபள்ளியை சென்றடையும் (1 சேவை). சார்லபள்ளி - வேளாங்கண்ணி பெட்டிகளின் அமைப்பு: 3 - குளிர்சாதன வசதி கொண்ட இரு அடுக்கு (AC Two-Tier) பெட்டிகள், 5 - குளிர்சாதன வசதி கொண்ட மூன்று அடுக்கு (AC Three-Tier) பெட்டிகள், 10 - படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் (Sleeper Class), 4 - பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் மற்றும் 2 - சரக்கு மற்றும் பிரேக் வேன்கள். ரெயில் எண் 07127/07128 சார்லபள்ளி - வேளாங்கண்ணி - சார்லபள்ளி விரைவு சிறப்பு ரெயில்களின் நேரம் மற்றும் நிறுத்தங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு (நேரங்கள் 24 மணிநேர அடிப்படையில்): மேற்கூறிய சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு, தெற்கு ரெயில்வே தரப்பில் 13.08.2026 (வியாழக்கிழமை) அன்று காலை 8.00 மணிக்குத் தொடங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/velankanni-festival-southern-railway-announces-special-trains




