சென்னை, சென்னையில் தேசியக்கொடி யாத்திரை நடைபெற்றது. இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- மூவர்ணம் இயக்கம் மாபெரும் நமது தேசியக்கொடியின் யாத்திரை சென்னையில் நம் பிரதமர் மோடி விடுத்துள்ள அழைப்பினை ஏற்று, தேசத்தின் மீது கொண்டுள்ள பேரன்பையும், அளவற்ற நாட்டுப்பற்றையும் பறைசாற்றும் வகையில், “ஹர் கர் திரங்கா” – வீடு தோறும் மூவர்ணம் இயக்கத்தின் ஒரு பகுதியாக மாபெரும் திரங்கா யாத்திரை இன்று சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்றது. கமலாலயம் தி.நகர் ம.பொ.சி. சிலையிலிருந்து, தமிழக பாஜக மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயம் வரை நடைபெற்ற இந்த மாபெரும் மூவர்ணக் கொடி யாத்திரை, தேசபக்தியின் பேரெழுச்சியாகவும், தேசிய உணர்வின் சங்கமமாகவும் திகழ்ந்தது. திருவிழா எங்கு பார்த்தாலும் பறந்த மூவர்ணக்கொடிகள்… எதிரொலித்த தேசபக்தி முழக்கங்கள்… பெருக்கெடுத்த மக்களின் பேராதரவு…இவை அனைத்தும் இணைந்து சென்னையின் வீதிகளை தேசப்பற்றின் திருவிழாவாக மாற்றின! இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திரங்கா யாத்திரையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் மற்றும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மற்றும் தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் பொங்குலேட்டி சுதாகர் ரெட்டி மற்றும் மாநில மற்றும் மாவட்ட, மண்டல் நிர்வாகிகள், காரியகர்த்தாக்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் உற்சாகத்துடன் பங்கேற்றனர். ஒவ்வொரு இல்லத்திலும் மூவர்ணம் பறக்கட்டும்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/tricolour-rally-in-chennai-nainar-nagendran




