சென்னை, கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று சந்திரயான்-3 இல் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதன் மூலம் ஒரு வரலாற்று சாதனையை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் படைத்தது. பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கிய அந்த இடத்திற்கு 'சிவசக்தி' என்று பெயரிடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்தியா, நிலவில் தரையிறக்கும் நான்காவது நாடாகவும், நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையும் பெற்றது. மேலும், இந்தத் தேதி அதிகாரபூர்வமாக 'தேசிய விண்வெளி தினமாக' அறிவிக்கப்பட்டது. அதேபோல ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். இதன்படி, சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய ஆகஸ்ட் 23-ஆம் தேதி. தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படுகிறது. இனிய தேசிய விண்வெளி தினத்தையொட்டி மத்திய இணை மந்திரி எல் முருகன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- தேசிய விண்வெளி தினம் இனிய தேசிய விண்வெளி தின வாழ்த்துகள்! நிலவிலிருந்து சூரியன் வரையிலும், அதற்கும் அப்பாலும், இந்தியாவின் விண்வெளிப் பயணம் என்பது உறுதி, புதுமை மற்றும் தேசியப் பெருமிதத்தின் ஒரு காவியமாகும். சாத்தியங்களின் எல்லைகளைத் தொடர்ந்து விரிவுபடுத்தி, ஒரு புதிய தலைமுறையை வானத்தைத் தாண்டி கனவு காணத் தூண்டும் இஸ்ரோவின் தலைசிறந்த விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் எங்கள் வணக்கங்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். Happy National Space Day! From the Moon to the Sun and beyond, Bharat’s space journey is a story of determination, innovation and national pride. Saluting the brilliant scientists and engineers of ISRO who continue to push the boundaries of possibility and inspire a new… — Dr.L.Murugan (@DrLMurugan) August 23, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/happy-national-space-day-l-murugan




