டெல்லி, தலைநகர் டெல்லியின் திலங்பூர் கோடா கிராமத்தை சேர்ந்த இளைஞர் வினய் (வயது 28). இவருக்கு 5 ஆண்டுகளுக்குமுன் நிஷா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 3 வயதில் மகள் உள்ளார். அடித்துக்கொலை இதனிடையே, மனைவியின் நடத்தையில் வினய் சந்தேகப்பட்டுள்ளார். இது குறித்து கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2ம் தேதி இரவு கணவன், மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த வினய் வீட்டில் இருந்த பேட்டரியால் (battery) நிஷாவை அடித்துக்கொன்றார். பின்னர், வீட்டில் இருந்த விஷத்தை வினய் குடித்துள்ளார். இதையடுத்து அருகே உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு மகளை அழைத்து சென்ற வினய் மனைவியை அடித்து கொலை செய்துவிட்டதாகவும், தான் விஷம் குடித்துவிட்டதாகவும் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சகோதரி வினய்-ஐ உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு வினய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/suspecting-affair-delhi-man-kills-wife-with-battery-consumes-poision-then-tells-family




