போரூர், சென்னை சாலிகிராமத்தில் வசிக்கும் 31 வயதான இளம்பெண் சின்னத்திரை மற்றும் சினிமா படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். "போட்டோ ஷூட்" இவரை பெருங்குடி பகுதியை சேர்ந்த நந்தி ராம நாதன் (65) என்பவர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது "நான் சினிமா தயாரிப்பாளர் புதிதாக தயாரிக்கும் படத்தில் நீங்கள் கதாநாயகியாக நடிக்க வேண்டும். மேலும் அதே பகுதி காவேரி தெருவில் உள்ள தங்கும் விடுதியில் நடந்து வரும் "போட்டோ ஷூட்" டில் கலந்து கொள்ள வேண்டு, என்று கூறி அழைத்தார். இதையடுத்து நடிகை அந்த விடுதிக்கு நேரில் சென்றார். அப்போது தயாரிப்பாளர் நந்தி ராமநாதனுடன் சென்னை தரமணி மற்றும் விருதுநகரை சேர்ந்த 2 இளம்பெண்கள் 7 வயது சிறுமி உள்ளிட்ட 4 பேர் ஒரே அறையில் இருந்தனர். அங்கிருந்த பெண் தனது செல்போன மூலம் பல்வேறு கோணங்களில் நடிகையை கவர்ச்சியான தோற்றத்தில் புகைப்படம் எடுத்தார். நிர்வாண கோலத்தில் பின்னர் படத்தில் சாமி வேஷம் போட வேண்டி உள்ளது. உடம்பில் காயத் தழும்பு ஏதும் தெரியக் கூடாது. எனவே முகத்தை மறைத்துக் கொண்டு நிர்வாண கோலத்தில் புகைப்படம் ஒன்று எடுக்க வேண்டும் என கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நடிகை, அங்கிருந்த தயாரிப்பாளர் மற்றும் உடன் இருந்த பெண்களிடம் தகராறில் ஈடுபட்டு விடுதி அறையில் இருந்து வெளி யேறினார். 3 பேர் கைது மேலும் இதுபற்றி உட னடியாக செல்போன் மூலம் காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சிங்கப்பெண் அதிரடிப்படை சப்- இன்ஸ் பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து நடிகையிடம் அத்து மீறலில் ஈடுபட்ட தயாரிப்பாளர் நந்தி ராமநாதன் மற்றும் அங்கிருந்த 2 பெண்கள் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். சிறுமி மீட்பு அவர்கள் மீது பாலியல் தொந்தரவு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் உடன் இருந்த சிறுமியை போலீசார் மீட்டு அடையாறில் உள்ள குழந்தைகள் காப்ப கத்தில் சேர்த்தனர். கதாநாயகி வாய்ப்பு தருவதாக கூறி போட்டோ ஷூட் என்கிற பெயரில் நடிகையிடம் நிர்வாண படம் எடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/forcing-actress-to-pose-photo-shoot




