தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு அமைந்த நிலையில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை என்ற அமைச்சகத்தின் பெயர் ‘சமூகநீதித்துறை’ என மாற்றப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் அமைச்சர் வன்னி அரசு பதவியேற்ற பின்னர், இந்த பெயர் மாற்றம் குறித்து அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகின. ரவிக்குமார் எம்.பி இந்நிலையில், “ஆதி திராவிடர் என்ற சாதி கடந்த, சமயச் சார்பற்ற அடையாளத்தைக் கொச்சையாகப் புரிந்துகொள்பவர்கள்தாம் அதை மாற்ற வேண்டும் எனக் கோருகிறார்கள். அந்தக் கோரிக்கையை இந்த அரசு ஏற்றுக்கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது” என விசிக எம்.பி ரவிக்குமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக அமைச்சர் வன்னி அரசிடம் எம்.பி ரவிக்குமாரின் கருத்து தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வன்னி அரசு, " சமூகநிதி என்பது விடுதலையை பெற்று தருவது தான். எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார். அமைச்சர் வன்னி அரசு ஆனால் கட்சி தலைவர் இது குறித்து அறிவிப்பார். சமூகநீதிக்காகப் போராடும் துறை தான் இது. அதனால் பெயர் மாற்றம் என்பது ஆதிதிராவிடர் நலத்துறையகவோ, பழங்குயினர் நலத்துறையகவோ மட்டுபடுத்தாது. பெயர் மாற்றம் என்பது தொலைநோக்கு பார்வையுடன் மாண்புமிகு முதல்வர் அறிவித்திருக்கிறார். அதனால் இதில் எந்த அரசியலும் இல்லை" என்று தெரிவித்திருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/minister-vanni-arasu-on-vck-mp-ravikumar-statement




