தூத்துக்குடி, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்ட விரோதமாக மது விற்றதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாலிபர் கைது தூத்துக்குடி அமுதாநகர் 1-வது தெருவைச் சேர்ந்த நாகராஜ் மகன் அருணாச்சலம் (வயது 24). இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு எப்.சி.ஐ. குடோன் அருகே சட்ட விரோதமாக மதுபான பாட்டில்களை வைத்து விற்பனை செய்ததாக தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தரண்யா தலைமையிலான போலீசார் கைது செய்தனர். வாலிபர் உயிரிழப்பு அதை தொடர்ந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணையில் இருந்தபோதே அருணாச்சலத்திற்கு திடீரென உடலநலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். உறவினர்கள் போராட்டம் வாலிபர் உயிரிழந்த செய்தி பரவியதும், அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மருத்துவமனை மற்றும் காவல் நிலையப் பகுதியில் திரண்டனர். விசாரணை என்ற பெயரில் போலீசார் நடத்திய கடுமையான தாக்குதலாலேயே அருணாச்சலம் உயிரிழந்துள்ளார். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும், பரப்பரப்பான சூழலும் நிலவியது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இச்சம்பவம் குறித்து, தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அருணாச்சலம் விசாரணையின் போது மயங்கியதால் மருத்துவமனையில் அனுமதித்ததாக தூத்துக்குடி டி.எஸ்.பி. சுனில் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அருணாச்சலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தலை உள்ளிட்ட இடங்களில் தாக்கியதாக கூறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-in-thoothukudi-after-going-for-questioning-relatives-protest-stirs-up-controversy




