லக்னோ, வடமாநிலங்களில் கன்வாரி யாத்திரை என்பது முக்கிய மத நிகழ்வாகும். இந்து மதக்கடவுள் சிவபெருமானை வழிபட பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வார்கள். பக்தர்கள் யாத்திரை சென்று கங்கை ஆற்றில் இருந்து புனித நீரை சேகரித்து தங்கள் ஊரில் உள்ள சிவன் கோவில்களில் அபிஷேகம் செய்யும் நிகழ்வே கன்வாரி யாத்திரையாகும். 4 பேர் பலி இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தை சேர்ந்த கன்வாரி யாத்திரை பக்தர்களில் 4 பேர் அம்மாநிலத்தின் பரூகாபாத் நகரின் பஞ்சல் கட் பகுதியில் பாயும் கங்கை ஆற்றில் நேற்று குளித்துள்ளனர். அப்போது, ஆற்றில் நீரோட்டத்தில் அதிகமாக இருந்துள்ளது. இதனால் 4 பேரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதில் 4 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் 4 பேரும் உயிரிழந்துவிட்டதாக போலீசார் அறிவித்துள்ளனர். அவர்களின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/four-devotees-drown-ganga-river




