சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- பட்டியல் வெளியானது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2026-27ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (B.V.Sc & A.H.) மற்றும் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான (B.Tech உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு / பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு / கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு) தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப்பட்டியல் 30.07.2026 (வியாழக்கிழமை) காலை 10.00 மணிக்கு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் செ. கமலியால் வெளியிடப்பட்டது. முதல் 5 இடங்களை பெற்ற மாணவர்கள் இந்நிகழ்வில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறையின் அரசு செயலர் அனு ஜார்ஜ், பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் துணைவேந்தர்(பொறுப்பு) ர. நரேந்திரபாபு மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ச.மு.க. கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். தரவரிசைப்பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற மாணவர்களின் (B.V.Sc & A.H. மற்றும் B.Tech) விவரங்களும் வெளியிடப்பட்டன. இணையதளத்தில் காணலாம் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப்பட்டியலை (B.V.Sc & A.H. மற்றும் B.Tech) பல்கலைக்கழக இணையதளத்தில் அல்லது காணலாம். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு (Online Counselling) விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும். தரவரிசைப் பட்டியலில் உள்ள சந்தேகங்களுக்கு 31.07.2026 முதல் 02.08.2026 வரை 044-29997349 மற்றும் 044-29997348 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது admission@tanuvas.org.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/veterinary-science-courses-rank-list-released




