கோத்தகிரி, மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் வெள்ளைப்பூண்டு கிலோ ரூ.500 -க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் வெள்ளைப்பூண்டை அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். காய்கறிகள் சாகுபடி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறி சாகுபடி பிரதானமாக உள்ளது. விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலங்களை பதப்படுத்தி கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். இதே போன்று ஒரு சில விவசாயிகள் ஏற்றுமதி தரம் வாய்ந்த புரூக் கோலி, ஐஸ்பெர்க் உள்ளிட்ட இங்கிலீஷ் காய்கறிகளையும் சாகுபடி செய்து, கணிசமான லாபம் ஈட்டி வருகின்றனர். வெள்ளைப்பூண்டு நீலகிரியில் விளையும் வெள்ளைப்பூண்டு அதிககாரத்தன்மை கொண்டதாகவும், மருத்துவ குணம் கொண்டதாகவும் இருக்கிறது. இதனால் நீலகிரி பூண்டுக்கு எப்பொழுதும் சந்தையில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதன் காரணமாக கோத்தகிரி சுற்று வட்டாரப்பகுதிகளான கட்டபெட்டு, பனஹட்டி, பில் லிக்கம்பை, கக்குச்சி, மிளிதேன், ஈளாடா உள்பட பகுதிகளில் விவசாயிகள் பலர் மருத்துவ குணம் கொண்ட நீலகிரி பூண்டை தங்களது தோட்டங்களில் பயிரிட்டு வருகின்றனர். ஆனால் நடப்பாண்டு பெரும்பாலான விவசாயிகள் பூண்டு பயிரிடவில்லை. மேலும் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் பூண்டின் வரத்தும் குறைந்துள்ளது. ரூ.500-க்கு விற்பனை எனவே வெள்ளைப்பூண்டின் விலை படிப்படியாக உயர்ந்து கடந்த சில மாதங்களாக பூண்டு கிலோ ஒன்றுக்கு 500 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. எனவே விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் பூண்டு பயிரிட ஆர்வம் காண்பித்து வருவதுடன், விளைந்த பூண்டை அறுவடை செய்து விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர். இது குறித்து பூண்டு பயிரிட்டுள்ள ஈளாடா கிராம விவசாயி கூறியதாவது:- முதல் போகத்தில் அறுவடை செய்யப்படும் நீலகிரி பூண்டு சமையல் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 2-ம் போகத்தில் அறுவடை செய்யும் பூண்டு விதைக்காக பயன்படுத்தப்படுகிறது. விதைக்காக நீலகிரி பூண்டுகளே பெரிதும் பயன்படுத்தப்படுவதால், 2-ம் போகத்தில் அறுவடை செய்யப்படும் பூண்டு விதைகளை இந்தியா முழுவதிலும் இருந்து வந்து விவசாயிகள் வாங்கிச் செல்கின்றனர். தற்போது வரத்து குறைந்துள்ளதாலும், தேவை அதிகரித்து உள்ளதாலும், பூண்டின் கொள்முதல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக மேட்டுப்பாளையம் காய்கறி மண்டி யில் பூண்டு கிலோவுக்கு ரூ.500 வரை கொள்முதல் விலை 1 கிடைத்து வருகிறது. எனவே தற்போது பூண்டு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைத்து வருவதால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/garlic-procured-at-500-per-kg-farmers-busy-with-harvest-operations




